Step into an infinite world of stories
Fiction
திகில் கதையானாலும் சரி, தித்திப்பான கதையானாலும் சரி, திரு.என்.சி. மோகன்தாஸ் தனக்கு என ஒரு பிரத்யேக எலக்ட்ரிக் கடை வைத்திருக்கிறார். இன்றைய இளைஞர்கள் அவருடைய கதைகளால் வசீகரிக்கப்பட்டிருப்பது அதனாலேயே சாத்தியமாகிறது. மழைத் துளியில் பாயும் சூரியனின் ஒளி ஏழு நிறங்களாக விரிவதுபோல எந்தக் கருவிலும் என்.சி.எம்.மின் பார்வை நுழைகிறபோது வித்தியாசமான பல கோணங்கள் மிளிர்கின்றன.
என்ன தான் சஸ்பென்சும், திரில்லும், விறுவிறுப்பும் தந்தாலும், ஆரம்பித்தால் கதையை முடிக்காமல் புத்தகத்தை மூடுவதில்லை என்றாலும் கூட கிரைம் கதைகள் என்றாலே எல்லோருக்கும் தொக்கு தான். அவை இலக்கியத்திற்கு விரோதிகளாகவே கருதப்படுகின்றன.
அதற்காக மெஜாரிட்டி வாசகர்களின் விருப்பத்தை எப்படி ஒதுக்க முடியும்? கிரைம் கதைகள் படைக்க அலாதி மூளை வேண்டும் என்பார்கள். கற்பனை வளம் வேண்டும். சஸ்பென்ஸ் தந்தாக வேண்டும்!
இன்றைய வாசகர்கள் புத்திசாலிகள் பாதி படிக்கும் போதே கொலையாளியைக் கண்டுபிடித்து விடத் துடிப்பவர்கள். அவர்களையும் ஏமாற்றி, அவர்கள் எதிர்பார்க்காத யாரையாவது கோடிட்டுக்காட்ட வேண்டும். அந்த சஸ்பென்சும், திரில்லும், விறுவிறுப்பாக வாசிக்கலாமா...
Release date
Ebook: 14 July 2021
English
India