Step into an infinite world of stories
இதுவொரு வித்தியாசமான நாவல்! நாயகன் கல்யாண் கமலியை ஆத்மார்த்தமாய் நேசிக்கிறான். விதி வசத்தால் தனது பழைய ஞாபகங்களை அவன் இழக்கிறான். இவள் தன் காதலி என நினைத்து 'சோனாலிக்கு' மாலை சூட்டுகிறான்.
மானசீகமான காதலுக்கு ஒரு சக்தி உண்டு. அது... அவனது உள்ளத்தின் அடித்தளத்தில் உறைந்து கிடந்த காதலை உணர்த்துகிறது.
கல்யாணின் அடிமனதில் கல் வெட்டாய் பதிந்து போயிருந்த காதல்... அவன் நெஞ்சை நெருடி நெருக்கமாக வைக்கிறது. கமலி... காவிய கால சகுந்தலை போல் கல்யாணின் மனதில் ஓவியமாய் பதிந்தவள்...
துஷ்யந்தன் போலவே கல்காண்... அவளை அறவே மறந்திருக்கிறான்...
காலங்கள் மாறலாம்... கோலங்கள் அழியலாம்... உண்மையான காதல் மாறுவதில்லை... அழிவதில்லை...
கல்யாண் - கமலி மானசீகமான காதல் என்னவாயிற்று? வாசித்து தெரிந்து கொள்ளவும்.
இதிலும் சித்தர் - அமானுஷ்யம் உண்டு...!
Release date
Ebook: 5 February 2020
English
India