Step into an infinite world of stories
Non-Fiction
மருது, முதுகில் கூன் விழுந்த கிராமத்துச் சிறுவன். தாய் தந்தை இருவரும் இல்லை. பாட்டியின் ஆதரவில் வாழ்பவன். பள்ளிக்கு சென்றால் சக மாணவர்கள் கூன் முதுகைக் கிண்டல் செய்கிறார்கள். ஆசிரியரிடம் சொன்னால் அவரும் சேர்ந்து கிண்டலடிக்கிறார். மனம் வெறுத்து ஊருக்கு வெளியே பாழடைந்த மண்டபத்தில் வந்தமர்கிறான் மருது.
அங்கே ஒரு தாடிக்கார சித்தர் மந்திரப் பாடல்களைப் பாட, அதைக் கேட்டு அப்படியே அட்சரம் பிசகாமல் பாடுகிறான் மருது. அவனது தனி திறமையைக் கண்டுபிடித்த சித்தர் அவனுக்கு ஒரு மாபெரும் எதிர்காலம் இருப்பதை தன் ஞான திருஷ்டியால் உணர்ந்து, அந்த ஊரைக் கடந்து செல்லும் எக்ஸ்பிரஸ் ரயில் பெட்டிக்குள் அவனைத் தூக்கிப் போட்டு, பட்டணத்துக்கு அனுப்புகிறார்.
கால ஓட்டத்தில் பல சோதனைகளைக் கடந்து மருது....மனோஜ் குமார் என்ற பெயரில் பெரிய பாடகராகி விடுகிறான். தான் பிறந்த ஊரின் திருவிழாவிற்கு வலியச் சென்று தன்னுடைய இசைக் கச்சேரிக்கு ஒப்புதல் தருகிறான்.
அந்த ஊர் மக்கள் அவனை அடையாளம் தெரிந்து கொண்டனரா?...நாவலைப் படியுங்கள்.
Release date
Ebook: 17 May 2021
English
India