Step into an infinite world of stories
கதாநாயகன் நேர்மையானவன். அவன் வேலை பார்க்கும் துறையில் தன்னைப் பொறுத்தவரை ஒழுக்கமானவனாக, சிறந்த பணியாளனாக இருந்தாக வேண்டும் என்று பிடிவாதமாய் நிற்கிறான். அவன் தந்தை ஒரு அரசியல்வாதி. ஒரு கான்டிராக்ட்டுக்கு அவன் உதவி செய்ய வேண்டும் என்று தந்தையே அவனை நாடுகிறார். அவர் பரிந்துரைக்கும் நபர் ஊழல்வாதி என்று சொல்லி என்னால் ஆகாது என்று மறுத்துவிடுகிறான். அவன் உதவியில்லாமலேயே வேறு வழியில் அணுகி எடுத்த காரியத்தை முடிக்கிறார் தந்தை. அவன் விரும்பும் அதே அலுவலகத்திலுள்ள ஒரு பெண்ணின் தந்தை தனக்கு துரோகம் செய்தவர் என்றும், அவளை நீ அடைய முடியாது என்று பழி வாங்குவதுபோல் மறுதலிக்கிறார். தன் நேர்மைக்குத் தன் தந்தையிடமிருந்தே தனக்குக் கிடைத்த விலை அது என்று எண்ணி, மனம் மறுகுகிறான் அவன். காற்று தடையற்றது. அதை வேலி போட்டு அடைக்க எவராலும் ஆகாது என்று தன் நன்னடத்தைக்காகப் பெருமை கொள்கிறான்.
Release date
Ebook: 18 May 2020
English
India