Step into an infinite world of stories
Classics
அகம், புறம் என்று தமிழர்கள் காதல் வாழ்க்கையையும் போர் வெற்றிகளையும் குறிப்பிட்டு இலக்கியங்கள் படைத்துள்ளார்கள்.
இதில் சங்கம் மருவிய காலத்தில் வந்த பதினெண் கீழ்க்கணக்கு நூல்களுள் புறப்பொருள் நிகழ்ச்சியாகிய யுத்த களச் செய்திகளைப் பற்றி கூறக்கூடிய ஒரே ஒரு நூல் தான் உள்ளது.
அறத்தைப் பாடக் கூடிய நூல்கள் பல உள்ளன. காதலைப் பற்றிய பாடக் கூடிய நூல்களும் பல இருக்கின்றன. இதில் போர்ச் செய்திகளையும் வீரத்தையும் கூறக் கூடிய ஒரே நூலாக இந்த 18 நூல்களில் உள்ளது களவழி நாற்பதாகும்.
இதில் ஏர்க்களம் பற்றியும் போர்க்களம் பற்றியும் பாடக் கூடிய நூல்கள் எல்லாம் களவழி என்று சொல்லப்படும்.
இதில் வரும் நாற்பது பாடல்களும் இறுதியில் களத்து என்ற வார்த்தையைக் கொண்டு முடிகிறது. அதன் காரணமாகவும் போர்க்கள நிகழ்ச்சியை இந்த நூல் விளக்குவதாலும் இந்த நூலில் நாற்பது பாடல்கள் இருப்பதாலும் இந்த நூலை களவழி நாற்பது என்று சொல்கின்றார்கள்.
பொய்கையார் இயற்றிய இந்த நூல் நான்கு அடியில் அளவியல் வெண்பாக்கள் 22 ம் பஃறொடை வெண்பாக்கள் 19 ஆக இதில் 41 பாடல்கள் உள்ளன.
இதில் வரும் 3 பாடல்களில் பொருத களத்து என்றும் ஒரு பாடலில் பெய்த களத்து என்றும் மற்றொரு பாடலில் வீழ்ந்த களத்து என்றும் மற்றும் உள்ள 36 பாடல்களில் அட்ட களத்து என்றும் முடியும்படியாக இங்கு பாடியிருப்பது குறிப்பிடத்தக்க அடையாளமாகும்.
களவழி நாற்பது என்ற இந்த நூலில் யானையைப் பற்றிய செய்திகள்தான் அதிகமாக வந்துள்ளது. இந்த நூலில் போர்க்கள காட்சிகளைப் பற்றி சிறந்த உவமைகளைக் கூறி ஆசிரியர் விளக்கியுள்ள பாங்கு மிகவும் அருமையானதாகும்.
பிற்காலத்தில் வந்த பரணி நூல்களுக்கு போர்க்களத்தைப் பற்றி வர்ணித்துப் பாடுவதற்கு இந்த நூல்தான் வழிகாட்டியாக இருந்தது.
அத்தகைய சிறப்பு மிக்க இந்த நூலை அனைவரும் படித்து பயன்பெறுமாறு கேட்டுக் கொள்கிறேன்.
Release date
Ebook: 17 May 2021
English
India