Step into an infinite world of stories
ஆசாரக் கோவை ஒழுக்கங்களைத் தொகுத்து கூறுவது என்று அர்த்தமாகும். இந்த நூலும் பதினெண்கீழ்கணக்கு நூல்களுள் ஒன்றாகத் திகழ்கிறது.
பல்வேறு ஒழுக்க முறைகள் உள்ளம் சார்ந்திருக்கும். அவை செயல்பாடுகளின் மூலம் வெளியில் தெரியும்.
இத்தகைய ஆச்சார்ய நெறிகளைத் தொகுத்து கூறுவதற்கு கோவை என்று பொருள்கூடப் படுகிறது.
ஆசாரக்கோவை என்னும் இந்த நூலுக்கு மூல நூலாக விளங்குவது ஆரிடம் என்ற வடமொழி நூல் கூறப்படுகிறது.
இந்த நூல் குறள் வெண்பா சிந்தியல் வெண்பா, இன்னிசை வெண்பா, நேரிசை வெண்பா பற்றொடை வெண்பா என்று சொல்லப்படும் வெண்பாக்களை எல்லாம் பயன்படுத்தி எழுதிய நூலாகும். மேலும் இந்த நூலில் வரும் ‘‘அரசன் உவாத்தியான்’’ என்று தொடங்கும் செய்யுள் சவளை வெண்பா என்றும் வெண்பாவால் பாடப்பட்டுள்ளது.
இந்த நூல் முழுவதும் மொத்தம் 100 வெண்பாக்கள் வந்துள்ளது. இந்த நூலை இயற்றியவர் கயத்தூர்ப் பெருவாயில் முள்ளியார் ஆவர்.
வண்கயத்தூர் என்பது இவரது ஊர்ப் பெயர் முள்ளியார் எனப்து இவரது இயற்பெயர். ‘ஆர் எயில் மூன்றும் அழித்தான் அடி ஏத்தி என்பதனால்’ இவர் சைவ சமத்தவர் எனலாம். இச்செய்திகளை யெல்லாம் ‘‘ஆர் எயில் மூன்றும் அழித்தான் அடியேத்தி ஆரிடத்துத்தானே அறிந்த மாத்திரையான் ஆசாரம் யாரும் அறிய அருன் ஆய மற்றவற்றை ஆசாரக்கோவை எனத் தொகுத்தான். தீராத் திருவாயில் ஆய திறல்வண் கயத்தூர்ப் பெருவாயில் முன்னிஎன் பான்’’ என்று சிறப்புச் பாயிரச் செய்யுளின் மூலம் அறியலாம். இவருடைய காலம் கி.பி. ஐந்தாம் நூற்றாண்டு என்பர்.
ஆசாரக்கோவை என்பதற்கு ஒழுக்கங்களில் தொகுதி என்பது பொருளாம். அஃதாவது ஆசாரங்களைக் தொகுத்த கோவை என்பதாகும். அச்சமே கீழ்களது ஆசாரம்’ என்னும் குறள் ஆசாரம் என்பதற்கு ஒழுக்கம் என்ற பொருளிலேயே இச் சொல்லைக் கூறுகின்றன.
இந்நூலுள்ளும் ‘ஆசாரவித்து’ (1) ஆசாரம் எப்பெற்றியானும்படும்’ (96) ‘ ஆசாரம் வீடு பெற்றார்’ (100) என்று வருடம் இடங்களில் இச்சொல் ஒழுக்கம் என்ற பொருளிலேயே பயன்படுத்தியிருத்தலை அறியலாம்.
பொதுவாக மனிதர்கள் ஏற்றுக் கொண்ட ஒழுக்கங்களைத் தவிர நாள்தோறும் வாழ்க்கையில் குறிப்பாக புறநெறி ஒழுக்கங்களையும் அனுசரிக்க வேண்டியிருக்கின்றது.
தினமும் ஒவ்வொரு மனிதனும் மேற்கொள்ள வேண்டிய அத்தகைய ஒழுக்கங்களை இந்த நூல் பெரிய அளவில் எடுத்துக்காட்டுகிறது.
அகத்தூய்மையுடன் புறத்தூய்மைப் பற்றியும் அவற்றில் உள்ள அறநெறி கருத்துக்களையும் இந்த நூல் விளக்குகிறது.
குறிப்பாக வைகறை எழுதல், நீராடுதல், உடை உடுத்ததல், உணவு உண்ணுதல், உறங்குவது போன்ற பல நிகழ்ச்சிகளிலும் மேற்கொள்ள வேண்டிய ஒழுக்க நெறிகளை இந்த நூல் மிகவும் தெளிவாகவும் எடுத்துக் கூறுகிறது.
அத்துடன் ஒவ்வொரு மனிதனும் தன்னுடைய தினசரி வாழ்க்கையில் கடைபிடிக்க வேண்டியவை எவை? தவிர்க்க வேண்டியவை எவை என்பதை அறிந்து கொள்ள இந்த நூல் மிகவும் உதவுகிறது.
இந்நூலில், ‘முந்தையோர் கண்ட நெறி’ ‘யாவரும் கண்ட நெறி’ யாவருக்கும் கண்ட நெறி’ ‘பேரறிவாளர் துணிபு’ ‘‘நல்லறிவானர் துணிபு’ என்பன போன்ற பல தொடர்புகள் வருதலால் இந்நூலில் கூறப்பட்டுள்ள ஒழுக்க நெறிகள் பேரறிஞர் பலர்தம் பழுத்த அநுபவத்தால் ஆராய்ந்து அறிந்து சொன்னவைகளாகும் என்பது பெறப்படுகின்றது.
Release date
Ebook: 17 May 2021
English
India