Step into an infinite world of stories
ஐந்து வயது குழந்தை வைஷூவுடன் பர்வதம் மாமி வீட்டிற்கு கணவனால் நிராதரவாக விடப்பட்ட மஞ்சுளா வாடகைக்கு குடி வருகிறாள். இறந்து போன தன் மகளே உயிரோடு வந்தால் , அவளுக்கு ஒரு மகள் இருந்தால் தன் பேத்தியாக இருப்பாளே என இருவரும் ஆதரவு தர காலப்போக்கில் மாமியின் கணவர் இறக்க, மாமிக்கு மஞ்சு- வைஷூவே ஆதரவு.
மஞ்சு வீட்டில் அன்னதானம் நடக்க , பிச்சைக்கார தோற்றத்தில் ஒருவன் வர , மாமி மஞ்சுவிடம் சொல்ல, இருவரும் ஒருவரை ஒருவர் பார்த்து அதிர, மாமி யார் தெரிஞ்சவரா?எனக் கேட்கிறாள். மஞ்சு மாமியிடம் தன் கடந்த காலத்தை சொல்லும் போது கேட்ட வைஷூ , அதே மன இறுக்கத்தில் வெளியே இருசக்கர வாகனத்தில் செல்லும் போது , எதிரே வந்த மோட்டார் சைக்கிளில் மோதாமல் இருக்க, லேசாகத் திரும்பும் போது ஒரு வயசாளி மீது இடிக்க, அவருக்குதலையில் அடிபட, ஒரு இளைஞன் உதவியோடு குரோம்பேட்டை அரசு மருத்துவமனையில் சேர்க்கிறாள். அந்த இளைஞர் அதே மருத்துவமனையில் மருத்துவர் என பின்னர் அறிகிறாள்.
போக்குவரத்துக் காவலரிடம் தான் தெரியாமல் அந்தப் பெரியவர் மீது மோதி விட்டதாகவும்,வரும் அவசரத்தில் தன் செல்ஃபோன், வாகன ஆவணங்களை வீட்டில் வைத்து விட்டு வந்ததாகவும் சொல்லி, அவரிடம் ஃபோனை வாங்கி வீட்டில் மஞ்சுவிடம் விவரம் சொல்கிறாள்...இனி நடந்ததை அறியப் படியுங்கள்....
Release date
Ebook: 28 March 2025
Tags
English
India