Step into an infinite world of stories
Romance
தன்னைத் துரத்தித் துரத்திக் காதலித்த திவாகரின் காதலை ஏற்க பிரியதர்ஷினி போட்ட கண்டிஷன், “சிறு வயதிலேயே தந்தையை இழந்த என்னை தனி ஆளாய் இருந்து வளர்த்து…ஆளாக்கியவள் என் தாய்!...நான் உங்களைக் கல்யாணம் செய்துக்கிட்டு உங்க கூட வந்திட்டா…அவங்க மறுபடியும் தனியாயிடுவாங்க…அதனால….நான் புகுந்த விட்டிற்கு வரும் போது என் கூடவே என் தாயையும் கூட்டிக்கிட்டு வருவேன்.,…அதுக்குச் சம்மதம்ன்னா…உங்க காதலை ஏத்துக்கறேன்” என்கிறாள்.
காதல் மோகத்தில் திவாகரும் சம்மதிக்கிறான். அதை தன் தாய் தந்தையரிடமும் சொல்கிறான். தந்தை அதை முழு மனதோடு ஏற்றுக் கொண்டாலும் அவன் தாய் மல்லிகாவால் அதை ஏற்றுக் கொள்ள முடியவில்லை. அவள் மகனிடம் சம்மதம் தெரிவித்து விட்டு, தனியாய்ச் சென்று பிரியதர்ஷினியின் தாயைச் சந்தித்து மிரட்டுகிறாள்.
அந்த மிரட்டலுக்கு பயந்து அவள் தாயாரும் வர மறுக்கிறாள்.
திவாகர் - பிரியதர்ஷினி திருமணம் நடந்ததா?
நாவலுக்குள் உள்ளது விடை…வாசித்துப் பாருங்கள்.
Release date
Ebook: 11 January 2021
English
India