Step into an infinite world of stories
கல்லூரியில் நடந்த மாணவர் தலைவர் தேர்தலின் போது மாணவர்களுக்கிடையே ஏற்பட்ட தகராறில் முரட்டு மாணவனான கதிர், சேகர் என்னும் சக மாணவனின் இடுப்பை உடைத்து ஆஸ்பத்திரியில் போடுகிறான்.
பிரின்ஸிபால், கதிரின் தாய் ரத்தினத்தை வரவழைத்து விஷயத்தைச் சொல்ல, அவள் அந்த சேகரின் தாய் கனகத்தைச் சந்தித்து மன்னிப்புக் கோர மருத்துவமனை செல்கிறாள். அங்கு சென்ற பின்தான் தெரிகிறது பல வருடங்களுக்கு முன்னால், கதிர் பிறந்த போது தனக்கு தாய்ப்பால் சரிவர சுரக்காத காரணத்தால்...தன் குழந்தை கதிருக்கு தன் தாய்ப்பாலைக் கொடுத்தவள் அந்தக் கனகம் என்பது.
இந்த உண்மை தெரிய வந்ததும், கதிர், சேகரைத் தன் தம்பியாகவே எண்ணிப் பழகலானான்.
அன்று முதல் அவர்களிருவருக்கும் இடையில் நிகழும் சம்பவங்களை உருக்கமாகவும், உன்னதமாகவும் காட்டுகின்றார் கதாசிரியர்.
இறுதியில் அந்தக் கதிர் செய்யும் மாபெரும் தியாகமே...கதைக்கு அச்சாணியாகின்றது.
Release date
Ebook: 6 April 2020
English
India