Step into an infinite world of stories
இந்த புத்தகத்தை படித்துவிட்டு பெண்களை புரிந்துகொண்டு விடலாம் என்று நீங்கள் நம்பினால் அதற்கு நான் பொறுப்பல்ல. இது ஒரு சிறுகதை தொகுப்பு. மனோதத்துவ நூல் அல்ல.
நான் முதன்முதலாக எழுதிய “கண்ணம்மாவின் வயது” இந்த தொகுப்பில் வெளியாகிறது. கண்ணம்மா என்னும் பெண் என்னை மிகவும் பாதித்ததுதான் நான் கதை எழுதத் துவங்கியதற்கு காரணம். ‘இப்படியும் ஒருத்தி இருக்க முடியுமா?’ என்று என்னை வியக்க வைத்த பெண்.
அந்த கதை எழுதுவதற்கு இன்னொரு காரணம் என் சிறிய சகோதரன் அரவிந்த கிருஷ்ணன். எந்த விஷயத்தை கூறினாலும், அதில் ஒரு நகைச்சுவையை காண்பவன். மலைவாழ் பழங்குடியினர் வாழும் கிராமத்திற்கு நான் செல்கிறேன் என்று கூறியவுடன், “அவர்களும் நம்மை போலத்தான் இருப்பார்கள். செல்ஃபோன், கம்ப்யூட்டர் பற்றியெல்லாம் அறிந்திருப்பார்கள். ஏதோ சினிமாவில் வருவது போல் இலையை இடையில் ஆடையாக அணிந்து பாட்டு பாடி ஆடிவரும் பெண்களை எதிர்பார்க்காதே,” என்று கிண்டலாக அறிவுரை வழங்கினான்.
என் அரிய அதிர்ஷ்டம், அங்கு நான் கண்ணம்மாளை சந்தித்தது. என் கதைகளில் விவரிப்பு அதிகம் காணப்படாது. வர்ணனையை அதிகம் விரும்பாதவன் நான். இதனை என் “தேங்காய்மூடி அதிசயம்” தொகுப்பை படித்தவர்கள் அறிவர். திடுமென்று துவங்கி, வேகமாக வளர்ந்து தடாலடியாக முடிவதுடன் என் கதைகள் நின்றுவிடும். படிப்பவர்களுக்கு பாடம் கற்பிக்க நான் ஆசானும் அல்லன்; கையை பிடித்து வர்ணனை செய்து காட்டிடும் அளவு புலமை பெற்ற கலைஞனும் அல்லன். படிப்பவர் மனதில் உணர்ச்சியை தூண்டுவது மட்டுமே என் குறிக்கோள். அவை ஒரு சிறு புன்னகையாகவோ, கனத்த நெஞ்சாகவோ, ஓரிரு கண்ணீர்த்துளிகளாகவோ இருக்கலாம். அவ்வளவே.
Release date
Ebook: 5 January 2022
English
India