Step into an infinite world of stories
Religion & Spirituality
பழம்பெரும் இதிஹாஸமான ராமாயணம் பற்றி தனது காவியத்தில் கம்பன் பொதிந்து வைத்துள்ள பல்லாயிரக்கணக்கான முத்துக்களை அறிய ஆவல் கொண்டுள்ளோர் படிக்க ஏற்ற நூல் இது. இராமாயணம் பற்றிய தொடர் வரிசையில், பால காண்டம் ஒரு பார்வை, வால்மீகியின் அயோத்யா காண்டம் - இரு பாகங்கள், கம்பரின் அயோத்தியா காண்டம் முதல் மற்றும் இரண்டாம் பாகம் ஆகியவற்றைத் தொடர்ந்து இந்த கம்பரின் அயோத்தியா காண்டம் மூன்றாம் பாகம் வெளி வருகிறது. இந்த மூன்றாம் பாகத்தில் ஆறு செல் படலம், கங்கை காண் படலம், திருவடி சூட்டு படலம் ஆகிய மூன்று படலங்கள் இடம் பெறுகின்றன.
இராமனைக் காண பரதன் விரைந்து செல்வதும், குகன் பரதனை எதிர் கொள்வதும், இராமன் பரதன் சந்திப்பும், இராமனது பாதுகைகளை பரதன் ஏற்றுத் தலையில் சுமப்பதும் உள்ளிட்ட சுவையான விவரங்கள் இதில் இடம் பெறுகின்றன. நாலாயிர திவ்யபிரபந்தம் முதல் இராமநாடக கீர்த்தனை ஈறாக பல நூல்களிலிருந்து சரளமாக எடுத்துத் தரப்பட்டுள்ள மேற்கோள்களை இந்த நூலில் படித்து மகிழலாம். குடும்பத்தினர் படித்து மகிழ்வதோடு அனைவருக்கும் பரிசாகவும் அளிக்க உகந்த நூல் இது.
Release date
Ebook: 15 December 2023
English
India