Idhaya Nathi Gauthama Neelambaran
Step into an infinite world of stories
Biographies
இரும்பு மனிதர், இந்தியாவின் பிஸ்மார்க் என்றெல்லாம் புகழப்படுபவர் வல்லபாய். அவருடைய வாழ்க்கை வரலாறு என்பது தனிமனித வாழ்க்கை வரலாறாக அமையவில்லை. இந்திய சுதந்திரப் போராட்ட வரலாறாகவே அது விரிந்தது. அந்த அளவுக்கு அவர் இந்தத் தேசத்தை நேசித்திருக்கிறார். தேகசுகம் நாடாமல் தேச சுகமே பெரிதெனக் கொண்டு இறுதி மூச்சு வரை பாடுபட்டிருக்கிறார் வல்லபாய்.
இமயம் முதல் குமரி வரை அனைவரும் இந்தியரே என்று ஒற்றுமையுடன் வாழவும், ‘ஏக இந்தியா’ உருவாகவும் காரணமான தனிப்பெரும் தலைவர் சர்தார் வல்லபாய். இன்றைய இளைஞர்கள் அவசியம் படித்து உணர வேண்டிய வாழ்க்கை வரலாறு வல்லபாய் பட்டேல் வரலாறு ஆகும்.
Release date
Ebook: 28 June 2025
English
India