Step into an infinite world of stories
Non-Fiction
சமஸ்கிருத இலக்கிய நதியில் இருந்து ஒரு கிளை பிரிந்து இந்த நூலாக வெளிவந்துள்ளது. அன்பு நண்பர் திரு பி.எஸ். சர்மா அவர்கள் ரிஷிகளின் நூல்களில் இருந்து சேகரித்து தொகுத்த தனிமனித ஆளுமைக்கான கருத்துகள் இந்த நூலில் இடம்பெற்றுள்ளன.
தேசம், தர்மம், கலாசாரம் மூன்றும் ஒன்றிணைந்த பாரதியம் எத்தனை உயர்ந்தது? எவ்வாறு சர்வ காலத்திற்கும் சர்வதேச மக்களுக்கும் ஏற்றது? என்பதை இந்த நூல் நிரூபிக்கிறது. வாழ்க்கையை எல்லா கோணங்களிலும் ஆராய்ந்து வெற்றிக்கான வழிகளை வால்மீகி, வியாசர் போன்ற முனிவர்களும் சாணக்கியர் போன்ற நீதி நிபுணர்களும் தம் நூல்களில் அளித்துள்ளார்கள். அவை இன்றைய தலைமுறைக்கும் எத்தனை பயனுள்ளதாக உள்ளது என்பதை தெரிவித்து சமகால உதாரணங்களோடும் வரலாற்று நிகழ்வுகளோடும் பொருத்திக் கூறிய முறை பாராட்டுக்குரியது. தனி மனிதன், குடும்பம், சமுதாயம், தேசம் இவற்றுக்கிடையே உள்ள பொறுப்பு, தார்மிக ஒழுக்கநெறி, உறவு போன்றவை வலிமையாக இருந்தால்தான் உண்மையான வெற்றி கிடைக்கும். அத்தகைய வெற்றியை பலப்படுத்தும் எழுத்து அஸ்திரம் இந்த நூல். இளைஞர்களுக்கு புரியக்கூடிய எளிய முறையில் ஊக்கப்படுத்தும் மார்க்கங்கள் உள்ள இத்தனை அழகிய நூல் இதோ உங்கள் கையில்...
Release date
Ebook: 7 July 2023
English
India