Listen and read

Step into an infinite world of stories

  • Listen and read as much as you want
  • Over 400 000+ titles
  • Bestsellers in 10+ Indian languages
  • Exclusive titles + Storytel Originals
  • Easy to cancel anytime
Subscribe now
Details page - Device banner - 894x1036

Karna Parambarai

119 Ratings

4.5

Duration
10H 41min
Language
Tamil
Format
Category

Fiction

"கரணம் தப்பினால் மரணம் ! புகழ்பெற்ற பழமொழி. ஆனால் இது குட்டி கரணம் பற்றிய பழமொழி என்று பலரும் நினைக்கிறார்கள். ஆனால் உண்மையில் கரணம் என்றால் மூலிகை ரகசியம் என்று பொருள். ஒரு குறிப்பிட்ட மூலிகை ரகசியம் உள்ளது. அதன் பெயர் பஞ்ச கரணம். அது ரகசியமாக உள்ளவரை கவலையில்லை. ஆனால அந்த கரண ரகசியம் வெளியே தெரிந்தால், மனித குலம் நாசமடையும். அதனால்தான் கரணம் தப்பினால் மரணம் என்றார், அகத்தியர் . தமிழ் மண் வெறும் மூலிகை காடாக இருந்த காலம். தெற்கே வரும் அகத்தியர் பொதிகை மலைச்சாரலில் தவம் செய்து, தென் பகுதியில் இருக்கும் மூலிகை மர்மங்களை ஆய்வு செய்து உரைக்க, அவருடைய சீடர் புலத்தியர் அதனை சுவடிகளை நூலாக எழுதுகிறார். அந்த நூலின் பெயர் அகத்தியர் 12,000. குறிப்புகளை கூறிக்கொண்டே வரும் அகத்தியர், திடீரென்று புலத்தியரிடம், ''நான் இப்போது உனக்கு பஞ்ச கரணி' என்கிற மூலிகை ரகசியத்தை பற்றி கூறப்போகிறேன். இதனை நூலில் குறிப்பு எடுக்காதே. காரணம் இது ரகசியமாக இருக்க வேண்டும். இதனை காதுகள் வழியாக கேட்டு, மனதில் பதிய வைத்து, யாரையாவது சீடனுக்கு உபதேசிக்க வேண்டும். அவனும் அதனை ரகசியமாக வைத்து அதனை தனது வாரிசுக்கு சொல்ல வேண்டும். இப்படியே அந்த பஞ்ச கரணி ரகசியம் வழிவழியாக செல்ல வேண்டும். அதனை ரகசியமாகவே வைத்திருக்க வேண்டும். காரணம் அதனை வெளியிட்டால், மனிதர்கள் அதனை கொண்டு ஒருவரையொருவர் அழித்து கொண்டு விடுவார்கள். அவ்வளவு ஆபத்தானது பஞ்ச கரணி என்கிறார். காற்று, நீர்,மண் என்று சுரண்டி பணம் பண்ணிய மனிதர்கள், மூலிகை மர்மங்களையும் விற்று காசு பார்த்துவிடுவார்கள் என்று பயந்து எல்லாம் ரகசியமாகவே வைக்கப்படுகிறது. அகத்தியர் புலத்தியருக்கு அந்த ரகசியத்தை கூறுகிறார். புலத்தியர் சப்தமாதா பிள்ளான் என்கிற சித்தருக்கு ரகசியத்தை கூறுகிறார். சப்தமாதா பிள்ளான் ஜபமாலை சித்தருக்கு சொல்கிறார். ஜபமாலை சித்தர் உரகபூஷண சித்தருக்கு சொல்கிறார். உரகபூஷனர் தொன்னை காத்து சித்தருக்கு சொல்கிறார். தொன்னை காது சித்தர் ரகசியத்தை துளசி ஐயாவுக்கு சொல்கிறார். துளசி ஐயா தனது வாரிசாக நல்லம்ம செட்டியார் என்பவரை தேர்தெடுக்கிறார். நல்லம்ம செட்டியாருக்கும், அவர் மனைவிக்கும் வெகு நாட்களாக குழந்தை இல்லாததால், துளசி ஐயாவிடம் வந்து மூலிகை வைத்தியம் செய்து ஒரு மகன் நம்பிராஜனை பெறுகிறார்கள். அவன் நன்றாக படித்து , நள பவன் குரூப் ஹோட்டல்களின் 'சி ஈ ஓ'வாக அமர்ந்த பிறகு, அதன் உரிமையாளர் சந்திரசேகரின் இரண்டாவது மாப்பிள்ளையாக மாறுகிறான். நல்லம்ம செட்டியாரின் மனைவி வனதாயிக்கு கண் பார்வை கிடையாது. இருவரும், துளசி ஐயாவுக்கு உதவியாக இருக்கிறார்கள். துளசி ஐயா நல்லம்மரை தனது வாரிசாக அறிவித்து, பஞ்ச கரணி ரகசியத்தை அவரிடம் கூற போவதாக அறிவிக்க, பல மூலிகை வைத்தியர்கள் வந்து அவரை பாராட்டுகிறார்கள். வானதாயி அவர்களுக்கு விருந்து வைக்கிறாள். வீட்டில் காய்கறி இல்லாததால், பக்கத்து வீட்டு தோழி நாமகிரி என்ற பெண்ணிடம் பிரண்டையை வாங்கி துவையல் அரைக்க, பிரண்டையின் மகத்துவத்தை பற்றி நாமகிரி சொல்கிறாள். பிரண்டையை உண்டால் கெட்ட எண்ணத்துடன் வீட்டுக்கு வருபவர்களை வாந்தி எடுக்க செய்யும். பிறரை அண்ட விடலாமா கூடாத என்பதை கூறும் மூலிகை பிரண்டை என்று கூறுகிறாள். நாலைந்து மூலிகை மருத்துவர்கள் வந்து நல்லம்ம செட்டியாரை வாழ்த்த, ஒருவர் அவருக்கு கேதார்நாத்தில் இருந்து வாங்கி வந்த ருத்ராட்ச கொட்டையை அணிவிக்கிறார். வந்திருந்த வைத்தியர்களின் ஒருவர் பிரண்டை துவையலை தின்று விட்டு, வாந்தி எடுக்க, வனதாயி வந்திருந்த வைத்தியர்களில் ஒருவர் நல்ல எண்ணத்துடனே வரவில்லை என்று யூகிக்கிறாள். மறுநாள் நல்லம்ம செட்டியார், அந்த ருத்ராட்ச கொட்டையை அணிந்து கொண்டே,, பஞ்ச கரணை ரகசியத்தை, துளசி ஐயாவிடம் இருந்து உபதேசம் பெறுகிறார். அந்தத் ரகசியம், செட்டியார் கழுத்தில் இருக்கும், ருத்திராச்ச கொட்டையில் பதிவாகிறது. அது ருத்திராட்ச கொட்டையல்ல, ஒரு மைக்ரோ ரெக்கார்டர். உபதேசம் பெற்று விட்டு, நல்லம்ம செட்டியார் அருவியில் நீராடும்போது, ஒரு மர்ம உருவம் , அவரிடம் இருந்து மைக்ரோ போன் ரெகார்டரை திருடிக்கொண்டு நல்லம்ம செட்டியாரை அருவியில் தள்ளி கொன்று விடுகிறது. தந்தைக்கு கொள்ளி வைக்க வரும் மகன் நம்பிராஜன், மருமகள் சுகந்தா இருவரும் வனதாயியை சென்னைக்கு வரும்படி கூற, அவள் மறுத்துவிட, துளசி ஐயா கண்தெரியாத வனதாயிக்கு பஞ்ச கரணி ரகசியத்தை சொல்லிவிட்டு யோக நிலைக்கு போகிறார். அதற்கு முன்பாக, பஞ்ச கரணி ரகசியம் திருடப்பட்டதால், அந்தத் ரகசியத்தை வைத்து, அந்த மர்ம மனிதன் துஷ்ப்ரயோகம் செய்யாமல் பார்த்துகொண்டு ரகசியத்தை மீட்க வேண்டும் என்கிறார் வனதாயி. அவருக்கு சத்தியம் செய்து தருகிறாள். அவளது மகன் நம்பிராஜன் மாமனார் வீடு பெரிய கூட்டு குடும்பம். இரண்டு மகள்கள், அவர்களுடைய கணவன்கள், நான்கு மகன்கள், அவர்களது மனைவிகள், பேரன் பேத்திகள், ஹோட்டல் அதிபர் சந்திரசேகரின் விதவை தங்கை தனபாக்கியம் என்று பெரிய குடும்பம். அந்த குடும்பத்தில் திடீர் என்று விதவை அத்தை கொலை செய்யப்படுகிறாள். திடீரென்று காதிலும், மூக்கிலும் ரத்தம் வருகிறது. அடுத்தபடியாக, சந்திரசேகரின் மனைவி சூரியகாந்தம், பிறகு சந்திரசேகர், அதனப்பிறகு, அவருடைய மூன்றாவது மருமகள், அதன் பிறகு ஒரு பேரன் என்று வரிசையாக கொல்லப்படுகிறார்கள். சந்திரசேகரின் ஈம சடங்கிற்கு வரும் வனதாயி, பல மர்மமான நிகழ்வுகளை சந்திக்கிறாள். கண் தெரியாத அவள், ஒரு அறையில் உட்கார்ந்திருக்கும்போது பிரண்டையை பற்றி யாரோ ஒரு பழமொழி சொல்ல, அந்தத் குரலை தனது கிராமத்தில் அதே பழமொழியை கூறியபோது கேட்டதை உணர்கிறாள். கண்பார்வை இல்லாமல் இருந்தாலும், தனது மனக்கண்ணினால் எப்படி சிறுசிறு குறிப்புகளை வைத்து, அந்த கொலைகாரனை நோக்கி அவர் நகர்ந்து செல்கிறாள் என்பது மிகவும் விறுவிறுப்பான சம்பவங்களுடன் சொல்ல பட்டிருருக்கிறது. பிறகு அந்த கொலைகாரனை நெருங்கி அவனை வளைக்கிறாள். அந்த கரணி ரகசியத்தை கொண்டே அவனை அழைக்கிறாள். அந்த கரணி ரகசியம் என்ன ? அதனால மனித குலத்திற்கு என்ன நல்லது ? அதனால் ஏற்படும் தீமைகள் என்ன? வனதாயி அந்த ரகசியத்தை யாரிடம் சொல்லுகிறாள் என்பதுதான் மீது கதை. தனது வாரிசிடம் ரகசியத்தை ஒப்படைத்துவிட்டு, வனதாயி தனது மகனுடன் சென்னைக்கு பயணமாகிறாள் என்பதுதான் கதையின் முடிவு. மிகவும் விறுவிறுப்புடன் வேகமாக நகரும் கதை -- "கர்ணபரம்பரை."

© 2022 Storyside IN (Audiobook): 9789354838828

Release date

Audiobook: 7 April 2022

Others also enjoyed ...