Step into an infinite world of stories
ஒரு பெண் வீட்டுக்கு ஒரு சமையல்காரியாகவும் குழந்தை பெற்றுத் தரும் மெஷின் ஆகவும் மாமியார் மாமியாரை கவனிக்கும் ஒரு வேலைக்காரியாகவும் தான் இருக்க வேண்டும். அவளுக்கு என்று தன்மானமோ, சுயமரியாதையோ கூடாது என்று நினைப்பவர்கள் தான் அதிகம். இதில் கணவன் தனக்கு துரோகம் செய்து விட்டான் என்று அறிந்து, அவனை உதறி, விவாகரத்து வாங்கி துணிந்து நிற்கும் மங்கை பலருடைய பேச்சுக்கும் ஏளனத்திற்கும் ஆளாகிறாள்.
உனக்கு என்ன தெரியும் என்ற கணவரின் பேச்சை உதறித் தள்ளி வாழ்க்கையில் உயர்கிறாள். அப்பா மாதிரி உன்னிடம் காசு இல்லை நீ எனக்கு என்ன செய்ய முடியும் என்று விவாகரத்தின் போது அப்பாவிடமே தங்கி விடுகிறாள் பெண் அபர்ணா. மகன் மட்டும் இவளுடன் வருகிறான். தறி கெட்டுப் போன பெண் அபர்ணா வாழ்க்கையில் வழுக்கி விழுந்த சமயத்தில், அவள் காதலனின் தங்கையை எழில் திருமணம் செய்து கொண்டால் அபர்ணாவையும் ஏற்றுக் கொள்வதாக காதலன் வீடு சொல்ல மறுத்து விடுகிறாள் மங்கை.
நீ செஞ்சது தப்பு. உன்னுடைய ஒழுக்கம் கெட்ட நடவடிக்கைக்கு நீ தான் பதில் சொல்ல வேண்டுமே தவிர இன்னொருவர் வாழ்க்கையை அழிக்கும் உரிமை உனக்கு கிடையாது என்று கூறி விடுகிறாள். பெண் வாழ்க்கை திருந்தியதா? எழில் ஆசைப்பட்ட பெண்ணை மணம் செய்து கொடுத்தாளா? மங்கைக்கு உதவியாக இருந்த ஜெகா, மேனகாவுடன் சேர்ந்து என்னென்ன சாதனைகள் செய்தாள் என்று எல்லைகளற்ற வானம் கதையில் தெரிந்து கொள்ளலாம்.
எந்த ஒரு சூழ்நிலையிலும் ஒரு பெண் நியாயம் இல்லாத, ஒழுக்கக் குறைவான விஷயங்களை செய்யக்கூடாது. தன்மானமும் சுயமரியாதையும் தைரியமும் மிக முக்கியம் என்பதை விளக்குகிறாள் மங்கை.
Release date
Ebook: 10 April 2024
English
India