Step into an infinite world of stories
நகைச்சுவை சூப்பர் ஸ்டார் சந்துரு பழைய நகைச்சுவை நடிகர்களின் நகைச்சுவைகளை காப்பியடித்து ட்ராக் பண்ணி பணமும் புகழும் சம்பாதிக்கிறான். 1950களின் தமிழ் நகைச்சுவை நடிகனின் ஆவி ஓ.ஆர்.மாயன் தன் பழி வாங்கும் படலத்தை ஆரம்பிக்கிறது. சந்துரு ட்ராக் செய்ய போகும் ஒரு பட ஆபரேட்டர் அமான்ஷ்யமாய் கொல்லப்படுகிறார். சந்துருவின் காப்பி அடித்த ஸ்கிரிபட்டில் இரத்த எழுத்துகள் பூத்தன. சந்துருவுக்கு சின்னக்கலை கடவுள் பட்டம் கொடுப்பதாக ரசிகர்கள் கூறுகின்றனர். சந்துருவுக்கு பழைய நகைச்சுவைகளை திருடி தரும் யூசுப் கொல்லப்படுகிறான். சந்துருவுக்கு எதிராக திரண்டிருக்கும் நகைச்சுவை ஆவிகளை விரட்ட தாமோதர நம்பூதிரி வரவழைக்கப்படுகிறார். நம்பூதிரி ஆவிகளால் கொல்லப்படுகிறார். சிக்கந்தர் பாவா என்பவரை வைத்து ஜின்களை வைத்து சந்துருவுக்கு தொந்திரவு கொடுத்த ஒன்பது ஆவிகளும் வரவழைக்கப்படுகின்றன. அவை இறந்துபோன நகைசுவை நடிகர்களின் ஒப்பனையில் வந்த டூப்ளிகேட் ஆவிகள். இவ்வளவு சதிவேலைகளையும் செய்வது யார்? மீதி நாவலை படித்து தெரிந்து கொள்ளுங்கள். இது ஒரு ட்ரன்டி அமான்ஷ்ய நாவல்.
Release date
Ebook: 11 January 2021
English
India