அலுவலக வேலையாக வெளியில் சென்றிருந்த நிர்மல், அந்த வேலை சீக்கிரமே முடிந்து விட, தன் நண்பர் ஜகதீஷ் என்னும் கம்ப்யூட்டர் பித்தனைக் காணச் செல்கிறான். அவன், தான் கண்டுபிடித்த புதிய சாப்ட்வேர் பற்றி சொல்கிறான். “இந்த சாப்ட்வேரில் உன் மொபைல் நெம்பரைப் போட்டால் நீ இறக்கும் நாளை காட்டும்” என்று.
நிர்மல் அதைச் சொல்ல, ஜகதீஷ் அடுத்த வாரத்தில் ஒரு நாளை அவன் டெத் டேட் என்கிறான். ஆரம்பத்தில் அதைக் கண்டு கொள்ளாத நிர்மல் நாள் நெருங்க நெருங்க பயந்து, அந்த நெம்பரை சரண்டர் செய்கிறான். அந்த நம்பர் வேறு ஒருவனுக்கு போய் விட, அந்த வேறொருவன் குறிப்பிட்ட நாளில் இறக்கினான்.
ஆச்சரியமான நிர்மல் ஜகதீஷைப் பாராட்டச் செல்கிறான். இந்த முறை தன் உறவினனான தியாகுவை உடன் அழைத்துச் செல்கிறான். அப்போது ஜகதீஷ், “நீ பிறந்த ஊர், பிறந்த தேதி, பிறந்த நேரத்தைச் சொன்னான் உன் போன ஜென்ம மனைவி இப்போது எங்கு பிறந்துள்ளாள் என்பதை என் சாப்ட்வேர் சொல்லும்” என்கிறான். நிர்மல் அதை அவாய்ட் செய்யும் விதமாய் வெளியேறுகிறான்.
ஆனால், தியாகு மறுநாளே ஜகதிஷிடம் சென்று அந்த விபரங்களைச் சொல்லி, தன் போன ஜென்ம மனைவியை இப்போது காண விரும்புவதாச் சொல்கிறான்.
அதன் விளைவாய் அவன் சந்திக்கும் நிகழ்வுகளை சுவாரஸியமாக்கியுள்ளார் ஆசிரியர்.
Release date
Ebook: 18 May 2020