Step into an infinite world of stories
Short stories
ஆண்கள் மட்டுமே பெரும்பாலும் ஆபீஸ் சென்று சம்பாதித்து, குடும்பம் நடத்திக் கொண்டிருந்த காலகட்டத்தில், பெண்களும் நன்கு படித்து வேலைக்குச் செல்லும் அடுத்த கட்டம் வந்தது.
சுமார் 50 ஆண்டுகளுக்கு முன்னால், பெண்கள் சைக்கிள் ஓட்டுவதே பெரிய செய்தியாக இருந்தது. அதனாலேயே அவர்கள் புடவை கட்டிக் கொண்டு வசதியாக ஓட்டுவதற்கென்றே சைக்கிள்கள் தயாரிக்கப்பட்டன.
இப்படிப்பட்டச் சூழ்நிலைகளில் பெண்கள் ஸ்டெனோ வேலைக்கும், டெலிபோன் ஆபரேட்டர் வேலைக்கும், போய் வீட்டிற்குச் சம்பாதித்து வரும் நிலை வந்தது.
பிறகு படிப்பு விஷயத்தில் அபார முன்னேற்றம் வந்து, ஆண்களுக்கும் சரிசமமானவர்கள் - ஏன்? - அதற்கு மேலும் படிப்பும், பட்டங்களும், விருதுகளும் பெற்று வெவ்வேறு உயர்ந்த வேலைகளில் ஜொலிக்கத் தொடங்கினர். இப்போது நிகழ்காலத்தில் நடந்து கொண்டிருப்பதைக் கண்கூடாக் கண்டு வருகிறோம்.
வேலைக்குப் போகும் பெண்களின் திருமண விஷயங்களில் எப்படியெல்லாம் திண்டாடுகிறார்கள்; காதல் சமாசாரங்களுக்கு ஆபீஸ் செல்லும் பெண்களுக்கு எப்படியெல்லாம் வாய்ப்புகள் அமைகின்றன; அவசரப்பட்டு முடிவு எடுக்கும் பெண்கள் - காதல் விஷயங்களினால் தங்கள் திருமண விஷயங்களில் தானாகவே முடிவெடுக்கிறார்கள். பின்விளைவுகள் என்னவாக இருக்கும் என்று யோசிக்காமல் பெற்றோரின் எதிர்ப்பை சம்பாதித்துத் திண்டாடுகிறார்கள்
இது போன்ற சூழ்நிலைகளைப் பின்னணியாகக் கொண்டு அந்தக் கால கட்டத்திற்கு ஏற்றபடி எழுதப்பட்ட சிறுகதைகள் அடங்கிய தொகுப்பு இது.
- பாமா கோபாலன்
Release date
Ebook: 18 May 2020
English
India