Step into an infinite world of stories
Romance
பெண் மாவட்ட ஆட்சியாளராக கம்பீரமாப் பதவி ஏற்கும் ஜானகி.
அவளுக்கு ஏகப்பட்ட பொறுப்புக்கள். அவள் கையெழுத்துக்குக் காத்திருக்கும் காகிதங்கள் கோப்புக்கள் நேர்வழி நடக்கும் இவளின் கடமை…
இவளின் பிரத்தியேக சமையல் காரனாக ராமு பையா....நார்த்தில் இவள் பணியாற்றியபோது கிடைத்தவன் இவளுடனேயே இருக்கிறான்.
இவர்கள் இருவருக்குமே ஒரு கடந்த காலம் இருப்பது மற்றவர்களுக்குத் தெரியாது.
இவள் மாற்றலாகி சென்னை வந்த போது தான் பிரச்சனை வந்தது.
எஸ் பி அவினாஷ் இவளைச் சந்திக்க வரும்போதெல்லாம் ராமு மிஸ்ஸிங் அவினாஷின் சகோரன் பூஷன் ஒரு பத்திரிகையாளன்.பெண்கள் சிறப்பிதழ் ஒன்றுக்காக ஜானகியை சந்திக்க விரும்புகிறான். ஆனால் லேசில் அபாயிண்ட்மெண்ட் கிடைக்காத காரணத்தால் தன் சகோதரனை அணுகி ஜானகியை சந்திக்கிறான்.
ஏனோ அவன் மனம் ஜானகியை விரும்புகிறது அதுமட்டுமல்ல அவளிடம் ஏதோ ஒரு ரகசியம் இருப்பதாக அவன் பத்திரிகைகார உள்ளம் கூறுகிறது.
பேட்டி எடுக்கிறேன் என்கிற சாக்கில் அவளை அடிக்கடி சந்திக்கிறான்.பூஷனின் பேச்சு அவன் அடிக்கும் “ ஜோக்” இவை ஜானகிக்கும் பிடித்துப் போக சந்திப்பு அடிக்கடி நிகழுகிறது.
ஒரு நெகிழ்ச்சியான நேரத்தில் ஜானகி தன் கடந்தகாலம் பற்றிக் கூற.. பூஷன் திகைக்கிறான் .ஜானகிக்காக வருந்துகிறான்.
விஷால் என்கிற ஜானகியின் பழையக் கல்லூரித் தோழன் அவளிடம் ஒரு உதவியை எதிர்பார்க்க ஜானகி அதை மறுக்க விஷால் குறுக்கு வழியில் முயற்சிக்கிறான்.
ஜானகிக்கு மாற்றல் ஆர்டர் வருகிறது. ராமு காணாமல் போகிறான். பூஷனைத் தேடி ஜானகி போக அவனும் ஊரில் இல்லை.
அவள் கிளம்பும் நேரத்தில் ஒரு விதவைப் பெண் ஒரு பெண் குழந்தையுடன் அவளைத் தேடி வருகிறாள் தனக்கு விதவைக்கான பென்ஷன் வாங்க வழி செய்ய வேண்டி அழுகிறாள்…
அவள் காட்டிய புகை படத்தை பார்த்த ஜானகி திகைக்கிறாள்.
அந்தப் படத்தில் இருப்பது யார்?
பூஷனை ஜானகி சந்தித்தாளா?
ராமு பையா திரும்பி வந்தானா?
பூஷனின் மானசீகக் காதல் என்னவானது?
ஜானகியின் கடந்தகால மர்மம் என்ன? எல்லாமே சுவாரசிய சம்பவங்கள் .....படித்தாலே இனிக்கும்
Release date
Ebook: 18 May 2020
English
India