Step into an infinite world of stories
4.7
Non-Fiction
இந்த நாவல் ‘கோடுகளும் கோலங்களும்’, பயிர்த் தொழிலையும் அதில் ஈடுபடும் பெண்களின் வாழ்வையும் மையமாக்கி எழுதப்பட்டதுதான். ஆனால் இது முற்றிலும் வேறுபட்ட கோணத்தில் பார்வையைச் செலுத்தி எழுதப்பட்டது. எப்போதுமே, முரணான உண்மைகள் சிந்தையை நெருடும் போது அந்த நெருடலே அதை ஆராய வேண்டும் என்ற உந்துதலைத் தோற்றுவிக்கும். அதுவே படைப்புக்கும் ஆதாரமாகும்.
காலம் காலமாகக் குருட்டுத் தடங்களில் ஒடுக்கப்பட்டு வந்த இந்திய விவசாயக் குடும்பப் பெண், விழிப்புணர்வு பெற்றிருக்கிறாள். சிந்திக்கும் திறன் இவளுக்கு வந்திருக்கிறது. இவர்களுடைய தன்னம்பிக்கையும் சுயச்சார்பும், உழைப்பின் பயனாகப் பெற்றவை என்றாலும், சிந்திக்கும் சக்தியே அவற்றைச் சாத்தியமாக்கி இருக்கிறது. பயிர்த் தொழிலின் முன் நிற்கும் பிரச்னைகளை, சமூக நோக்கில் எதிர்நோக்குமளவுக்கு, ஒன்றுமே தெரியாமல் உழைத்து உழைத்துத் தேய்ந்திருந்த இந்தப் பெண்கள் விழிப்புணர்வு பெற்றிருக்கின்றன.
காலந்தோறும் பெண் என்ற கணிப்பு, பெண்களின் பின்னடைவுகளையே துல்லியமாகக் காட்டுவதான சோர்வையே தந்திருந்தது.
பெண்கள், பொதுத்துறைகளிலும், அரசுத் துறைகளிலும் முக்கிய இடங்களில் பொறுப்பேற்றிருப்பதும், அமைப்பு ரீதியிலான பெண்கள் இயக்கங்களின் இடைவிடாத செயல்பாடு சார்ந்த அனைத்து முடிவெடுக்கும் நிறுவனங்களுக்கும் பெண்களைக் குறிப்பாக்கியே வலியுறுத்தி இருக்கின்றன என்றால் மிகையில்லை.
இந்தத் திட்டத்தினால் பயனடைந்து, புதிய சாதனை படைக்க ஊக்கம் பெற்று வரும் பல பெண்களைச் சந்திக்க, எனக்கு ஊக்கமும் உறுதுணையுமாக இருந்தவர், டேனிடா திட்டத்தின் ஆலோசகர் திருமதி மங்களம் பாலசுப்ரமணியன் ஆவார். திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கற்பட்டு வட்டங்களில் உள்ள கிராம விவசாய மகளிரையே என் ஆய்வுக்கு உட்படுத்திக் கொண்டேன்
என்னைப் பொறுத்தமட்டில் ஒவ்வொரு நாவலும் புதிய பரிசோதனை முயற்சியாகவே இருக்கிறது.
ராஜம் கிருஷ்ணன்
Release date
Audiobook: 15 July 2021
English
India