Step into an infinite world of stories
சல்மாவின் நாவல் முழுமையாகப் பெண்ணுலகத்தால் நிரம்பியிருக்கிறது. புற உலகம் அறியாத பெண்களின் உள் உலகத்தை விரிக்கும் எழுத்து. துயர் நிரம்பிய உள்ளுக்குள் பெருகும் உணர்வுகளையும் அவற்றில் இருந்து காலத்தின் கைப்பிடித்துத் தாங்களாகவே கொஞ்சம் கொஞ்சமாக வெளியே வரும் திறனையும் இயல்பாகக் காட்டிச் செல்கிறது நாவல். அவர்கள் உலகமும் மொழியும் புதிது. மரபான மனங்களுக்கு அவ்வளவாக உவப்பில்லாமல் இருக்கலாம். ஆனால் மரபின் போர்வையில் மறைக்கப்பட்ட ஓர் உலகம் வெளியாகும்போது பொங்கிப் பெருகும் உடைப்பைத் தவிர்க்க இயலாது. இந்நாவலில் நிகழ்வதும் அத்தகைய ஒரு பிரவாகம்தான். Writer, poet salma's second novel. Salma's novel is filled with the stories of personal life of women, which the outer world has not much knowledge of. A melancholic world and how one overcomes it with time is portrayed realistically in the novel. The language and this world are new and might not be pleasant to conservative minds. But when the chains of conservative oppression are broken, there is a flood of narratives that are unleashed. The novel is one such story.
© 2021 Storyside IN (Audiobook): 9789369312955
Release date
Audiobook: 6 March 2021
English
India
