Step into an infinite world of stories
4.3
Personal Development
மனிதப் பிறப்பு என்பது, அவனது ஆசைகளால் உருவாக்கப்பட்டு, மனிதன் இப்பூமிக்கு வந்து, தன் ஆசைகளை நிறை வேற்றிக்கொள்ள, மனித நிலையிலிருந்து, மாறி மிருகப் பாதைக்குச் சென்று, எல்லா பாவங்களையும், தான் ஆசைப்பட்டதை அடைய செய்து, கடைசியில் நோய்களில் விழுந்து, வயோதிகத்தில் வாடி, இயலாமையில் விழுந்து, கடைசியில் மரணத்தில் மறைந்து போகின்றான்.
மனிதனை, அவனது மனித நிலையிலிருந்து மாறி, மிருக நிலைக்கு, அவனை செல்லா விடாமல் தடுக்கும், அதிசய 6 மகா சக்கரங்கள் நமக்குள்ளே, நம் தண்டுவடம் முழுக்க, இறைவன் சிவன் அமைத்துக் கொடுத்திருக்கின்றான்.
நமது உறுப்புக்கள், செல்கள், நாளமில்லா சுரப்பிகள், நாடிகள் எல்லாமே, இந்த 6 சக்கரங்களின் கண்காணிப்பில்தான் இயங்குகின்றன. இந்த சக்கரங்களில் தியானம் செய்து, இவற்றில் இருக்கும் சக்திகளை, விழிக்க வைத்து விட்டால், அதனால் மனிதனாகப் பிறந்தவன், தெய்வத்துக்கு இணையான சித்தனாக உருமாற முடியும்! சக்திகளையும் பெறுவது நடக்கும்.
மரணமற்ற வாழ்க்கையையும், நோயில்லா நிலையையும், வயோதிகம் வராத நிலையையும் அடைவதோடு, பஞ்சபூதங்களை வெல்வதும், அட்டமா சித்திகளை அடைவதும் செய்து, தன் காலம் முழுக்க இளமையுடன், நினைத்ததை நினைத்தபடி பெறும், சக்தியை மனிதனுக்கு அளிக்கும், 6 மகா சக்கரங்களை, மனிதன் தன் வசியப்படுத்தும் வழி முறைகளை, ஆசிரியர் உதயதீபன், மிக ஆழமாகவும், நுணுக்கமாகவும், இந்நூலில் கொடுத்திருக்கிறார்.
இனி, மனிதப் பிறவியில், தெய்வமாக வாழ, அவரது சக்கர வசிய முறைகளை, இந்த நூலில் படித்து, அதன் பயனைப் பெறுங்கள்.
Release date
Ebook: 18 December 2019
Tags
English
India