Step into an infinite world of stories
நான் தமிழகத்தின் குறிப்பாய் சேலம் மாவட்ட கிராமங்களில் வாழ வேண்டிய சூழல் ஏற்பட்டது. அதுவே இப்புதினம் ஜனிக்க காரணமாயிற்று.
இப்புதினத்தில் பல கதை மாந்தர்கள் உலாப் போகிறார்கள். நம் நெஞ்சோடு பேசி உறவாடுகிறார்கள். மின்வாரிய பொறியாளர் சரவணன், ஆரம்ப சுகாதார டாக்டர் அருள்தாஸ், பாதகமே தொழிலாய் கொண்ட அர்த்தனாரிக் கவுண்டர், அவருக்குத் துணைப் போகும் மயிலம்மாள், அவர்கள் வேலைக்காரி வேலாயி, அவர்கள் வீட்டு மருமகளான வாய் செத்த பூச்சியாய் வலம் வரும் புவனேஸ்வரி அவளின் சித்த சுவாதீனமற்ற கணவன் இளங்கோ, சினிமாப் பைத்தியமாய் வரும் பிராமணப் பெண் இளம் விதவை கிருத்திகா, ஆசாரக் குலத்தில் பிறந்து ஆச்சார அனுஷ்டானங்கள் அனைத்தையும் கடைப்பிடித்து எதிராளியின் பசி போக்குவதையே தன் நித்திய நியமமாய் கொள்ளும் முன்னேற்ற கருத்துக்கள் செறிந்தருக்கு மாமி, இளம் வயதில் அவளைக் தவிக்கவிட்டு தன் உணர்வுகளுக்காக வெளியே ஓடும் சத்தியமூர்த்தி ஐயர், அவர் உணர்வுகளின் வடிகாலான ஒரு மாதவியாய் வாழும் கனகலசுஷ்மி, டாக்டரின் வேலைக்காரன் சின்னு, அவன் மனைவி சின்னக்கிளி. ஒவ்வொருவரும் இந்த உலகத்தின் இயக்கத்தைத் தொடர்கிறார்கள்.
கிராம மக்களின் அறியாமையையும் மூடநம்பிக்கையையும் தனக்குச் சாதகமாக்கிக் கொள்ளும் சாமியார் அவரின் சீடர்கள். எப்படி அப்பாவி மக்களைச் சுரண்டிப் பிழைக்கிறார்கள், புவனேஸ்வரியின் வாழ்விற்குத் துணைப் போகாத மனப்பாதிப்பு கொண்ட எலக்ட்ரானிக் பொறியாளன் இளங்கோ, சரவணனிடம் பேராசை கொண்டு எப்படியும் வாழ்ந்து வளமை அடையலாம் என்கிற ஆவல் கொண்ட துணைவி மல்லிகா அவள் மாமனாய் வலம் வரும் சூதும் வாதுமாய் உலாவரும் அரசியல்வாதி. எனப் புதினம் இச்சமூகத்தைப் படம் பிடித்துக் காட்டுகிறது.
குடும்பம், சமூகம், அரசியல், திரைப்படத் துறை என எல்லாவற்றையும் தொட்டு போகிறது. இப்புதினம்.
Release date
Ebook: 15 February 2022
English
India