Step into an infinite world of stories
இந்த நாவலில் இடம் பெற்றிருக்கும் நாயகி நிவேதிதாவும், நாயகன் சேகரும் நட்பிற்குப் புதிய அகராதியையே உருவாக்கி விடுகிறார்கள். நிவேதிதா கதாபாத்திரம் உயர்ந்ததா, சேகர் கதாபாத்திரம் உயர்ந்ததா என்று சொல்லி விடுவது அத்தனை சுலபமல்ல. நிவேதிதாவின் தாய் தந்தை இனிய தாம்பத்தியத்தின் உயிரோட்டமான மொழிபெயர்ப்புகள்.
இந்த நாவலை வாசிக்கும் பெண்களுக்கு சேகரைப் போல ஒரு தோழமை கிடைக்காதா என்கிற ஏக்கமும், ஆண்களுக்கு நிவேதிதாவைப் போல ஒரு தோழமை கிடைக்காதா என்கிற ஏக்கமும் ஏற்படப் போவதென்பது உறுதி. நிவேதிதாவின் கணவன் மற்றும் அந்த வீட்டில் இருக்கிற ஆயா கதாபாத்திரங்கள் இன்னும் கதையில் நேரடியாக வராமல் மட்டுமே பேசப்படுகிற சில கதாபாத்திரங்கள் உட்பட கச்சிதமான வார்ப்பு.
இறுதிக்காட்சியில் நாவலாசிரியர் எல்லோர் இதயத்தையும் உணர்வின் கதகதப்பினால் உருகச் செய்து விடுகிறார். இந்த நாவலை இத்தனை சீக்கிரம் முடிக்காமல், இன்னும் விஸ்தரித்து எழுதியிருக்கக் கூடாதா என்கிற எண்ணம் இதன் நிறைவுப் பகுதியை படிக்கையில் ஏற்படுவது இந்த நாவலின் சிறப்பு.
காதலுக்காக எழுப்பப்பட்டிருக்கும் உலக அதிசயம் தாஜ்மஹால். நட்புக்காக எழுப்பப்பட்டிருக்கும் உலக அதிசயம் நிவேதிதா ஒரு புதுமலர்.
Release date
Ebook: 18 December 2019
English
India
