Step into an infinite world of stories
சில நூறு ஆண்டுகளுக்கு முன் குடும்பப் பெண் என்றாலே திருமணம் செய்து கொள்வதும் குழந்தை பெற்றுக் கொடுப்பதும். வீட்டு சமையல் செய்வதும் புகுந்த வீட்டு மனிதர்களை அனுசரித்துக் கொண்டு போவதும்தான் சொல்லப்பட்டிருந்தது. சில பெண்கள் வாய்ப்பாட்டிலும் நடனத்திலும் இசைக்கருவிகள் இசைப்பதிலும் தன்னை நன்றாக அலங்கரித்துக் கொள்வதுமாக இருந்தால். அவர்களை குடும்பப் பெண்கள் என்று ஏற்றுக் கொள்ளப்படவில்லை.
அவர்கள் ஒரு தனி சொசைட்டியாகவே வாழ்ந்து வந்தார்கள். கடவுளுக்கு முன் நடனம் ஆடுவதும். இசைக்கருவிகளை இசைப்பதிலுமே தன் காலத்தை கழித்தார்கள். அவர்களை பல பெரிய மனிதர்கள் தன் வீட்டில் மனைவி இருந்தாலும் கூட அவரிடம் தொடர்பு வைத்துக்கொண்டு அவர்களுக்கு தேவதாசி என்று பட்டம் கொடுத்து தங்கள் மனைவியாக ஆக்கிக் கொள்ளாமல் ஒரு வைத்துக் கொண்டிருக்கும் பெண்களாகவே அவர்களை நினைத்துக் கொண்டிருந்தார்கள். சிலப்பதிகாரத்தில் மாதவியை போல் தேவதாசிகளில் பலர் ஒரு வனுடன் வாழ்ந்து கொண்டு குழந்தையை பெற்றெடுத்து வளர்த்தவர்களும் உண்டு.
ஆணாதிகத்தினால் தான் தேவதாசி என்ற முத்திரை குத்தப்பட்டது. அந்த தேவதாசிகளின் ஒரு சிலரைப் பற்றி சொல்வதுதான் இந்த கதை.
Release date
Ebook: 30 August 2025
Tags
English
India
