Step into an infinite world of stories
Fiction
முத்தான இருபது சிறுகதைகளை உள்ளடக்கிய தொகுப்பு “சாத்தான் சொல்லைத் தட்டு” என்னும் இச்சிறுகதை தொகுப்பு. “கெடுவான் கேடு நினைப்பான்” என்னும் பழமொழியின் அடிப்படையில் உருவான சிறுகதையே சாத்தான் சொல்லைத் தட்டு என்னும் சிறுகதை. யதார்த்தமான ஒரு சிறிய நிகழ்ச்சியைக் கருவாய் எடுத்து, அதில் ஒரு செறிவான கருத்தைப் பதார்த்தமாக்கிய கதை. எனவேதான், இத்தொகுப்பிற்கே அந்த தலைப்பு வைக்கப்பட்டது.
பல வெகுஜன இதழ்களில் ஏற்கனவே பிரசுரமான கதைகளாய் இருந்த போதிலும், ஒரு தொகுப்பாய் உருவாக்கி வாசிக்கும் போது, நிறைவான விருந்தை, மனநிறைவோடு அருந்தினாற் போலிருக்குமல்லவா?
இதில் இடம்பெறும் “கொய்யாப்பாட்டி” சிறுகதையில் வரும் மூத்த பெண்மணியின் பாத்திரம் நேரில் கண்டு உருவான பாத்திரம். சம்பவமும் கூட நிஜத்தில் நடந்தவைகளே.
சில தொகுப்புக்கள் மூத்தோர்களைக் கவரும், சில தொகுப்புக்கள் இளையோர்களைக் கவரும், சில பெண்களால் அதிகம் ரசிக்கப்படும், சில ஆண்களால் மிகவும் பாராட்டப்படும். ஆனால், இச்சிறுகதைத் தொகுப்பு ஆறிலிருந்து அறுபது வரை உள்ள அனைவரையும் ஊன்றிப் படிக்க வைக்கும் என்பது உண்மை.
நன்றி.
இவண்,
முகில் தினகரன்
Release date
Ebook: 15 September 2020
English
India