Step into an infinite world of stories
Fiction
தமிழக அரசியலில் மறக்க முடியாத, மறக்கக்கூடாத 'இருவர்' என்றால் எம்.ஜி.ஆர் - கருணாநிதி என்றுதான் சொல்ல வேண்டும். இருவரும் தமிழ்நாட்டை முப்பது வருடம் ஆண்டியிருக்கிறார்கள். வேறு எந்த மாநிலத்திலும் இரண்டு முன்னாள் முதல்வர்கள் இவ்வளவு நட்போடு பழகியதில்லை. கட்டியணைத்ததில்லை. ஒன்றாகப் பணியாற்றியதில்லை. அதே சமயம், அரசியல் களத்தில் இரண்டு துருவங்களாகவும் இருந்ததில்லை. எதிரிகளாகவும் வாழ்ந்ததில்லை.
தன் வாழ்நாள் முழுக்க கருணாநிதிக்கு நண்பராக இருந்த எம்.ஜி.ஆர், தனது வாழ்க்கையின் கடைசி பதினான்கு ஆண்டுகளில் அரசியல் எதிரியாக இருந்தார். மேடையிலும் சரி, பத்திரிகையிலும் சரி இருவரும் ஒருவரை ஒருவர் தாக்கிக்கொண்டு வந்திருக்கிறார்கள். விமர்சித்திருக்கிறார்கள்.
ஒருவரை ஒருவர் சந்தித்தால் பேசிக்கொள்ள மாட்டார்கள் என்று நினைத்தால், அதுவும் இல்லை. பொது நிகழ்ச்சியில் இருவரும் சந்தித்தால் பேசிக் கொள்வார்கள். பழைய நட்பு குறித்த பேச்சோ, அரசியல் பேச்சா, வேறு என்ன பேசிக் கொள்வார்கள் என்றோ யோசித்து தங்கள் யூகங்களைச் செய்தியாக வெளியிடுவார்கள். ஆனால், இரு தரப்பிலிருந்தும் 'நட்புரீதியான சந்திப்பு’ என்றுதான் குறிப்பிட்டிருக்கிறார்கள்.
ஒரு கட்டத்தில், இவர்கள் சந்திப்பைப் பார்த்தவர்களால் அ.தி.மு.க கட்சி, தி.மு.க கட்சியோடு இணைகிறது என்ற வதந்தியும் பரவியது. பிறகு, இரு தரப்பிலிருந்தும் மறுத்தனர்.
தமிழ் நாட்டில் கடைசியாகச் சந்தித்துப் பேசிக் கொண்ட இரண்டு முதல்வர்கள் என்றால் எம்.ஜி.ஆர் - கருணாநிதி என்றுதான் சொல்ல வேண்டும். 91ல் இருந்து கருணாநிதி - ஜெயலலிதா சந்தித்துப் பேசிக் கொண்டதாக வதந்தியாகக் கூடச் செய்திகள் வந்ததில்லை. 2011ல் அ.தி.மு.கவின் தேர்தல் வெற்றிக்குப் பிறகு, ஜெயலலிதா - விஜயகாந்த் சந்திப்பு நடக்கவில்லை.
இந்த நூல் இவர்களின் அரசியல் செயல்பாடுகளை விமர்சிப்பதற்கானதில்லை. அவர்களைப் போற்றுவதற்காகவும் இல்லை. ஒரு நட்பின் விரிசல் தமிழ் நாட்டின் நாற்பதாண்டு கால அரசியல் வரலாற்றை எழுதியிருக்கிறது. எம்.ஜி.ஆர் 1972ல் தி.மு.கவை விட்டுப் பிரிந்து அ.தி.மு.க கட்சி தொடங்கியது முதல் தமிழ்நாட்டில் காங்கிரஸ் - தி.மு.க என்ற நிலைமாறி, அ.தி.மு.க - தி.மு.க என்று வந்திருக்கிறது.
1987ல் எம்.ஜி.ஆர் மரணமடையும் வரை இருவரின் நட்பு, அரசியல் எதிர்ப்பு இரண்டும் தொடர்ந்து கொண்டே இருந்தது.
பெரியார் - ராஜாஜி நட்புக்குப் பிறகு, தமிழகத்தில் சர்ச்சைக்குரிய அரசியல் நட்பு என்றால் கருணாநிதி - எம்.ஜி.ஆர் நட்புதான். கருத்துரீதியாக இருவரும் ஒருவரை ஒருவர் எதிர்த்துக் கொண்டார்களே தவிர, கொள்கைரீதியாக இருவருமே 'அண்ணா' வழி செல்பவர்கள்.
நாம் ஏற்றாலும், ஏற்காவிட்டாலும் அரசியல் வரலாற்றில் மறக்க முடியாத நிகழ்வு "கருணாநிதி - எம்.ஜி.ஆர்" நட்பு. நண்பர்களாக இருக்கட்டும், எதிரிகளாக இருக்கட்டும் இருவரின் வாழ்க்கையில் இருந்தும் நாம் கற்க வேண்டியது அதிகமாக இருக்கிறது.
அடுத்தடுத்து வரும் அரசியல் தலைவர்கள் மக்களுக்காக ஒற்றுமையாகச் செயல்பட வேண்டிய காலகட்டத்தில் இந்தப் புத்தகம் அவசியாக இருக்கிறது. எம்.ஜி.ஆர் - கருணாநிதி இருவருக்கும் நாற்பது வருடப் பழக்கம். இருபத்தைந்து வருடம் நண்பர்களாகவும், பதினைந்து வருடங்கள் அரசியல் எதிர்தரப்பிலும் இருந்து செயல்பட்டவர்கள்.
எம்.ஜி.ஆரைத் தி.மு.கவினரும், கருணாநிதியை அ.தி.மு.கவினரும் விமர்சனம் செய்யும் அரசியல் சூழல் இருந்துகொண்டே இருக்கிறது. இப்படிப்பட்ட சூழ்நிலையில் எம்.ஜி.ஆர் - கருணாநிதி இருவரின் பழகிய காலம் முதல் பிரிந்தகாலம் வரை இந்தநூல் பயணிக்கிறது.
- குகன்
Release date
Ebook: 2 February 2022
English
India