Step into an infinite world of stories
Varathunga Rama Pandiyan's Letter to his Brother.. To know more about this Letter, listen to Mr. Prof. G.Gnanasambandan's Audio.
வரதுங்கராமர் எனப் போற்றப்பட்ட பாண்டியன் கி.பி. 1588 முதல் 1612 வரை பாண்டிய நாட்டில் ஆட்சி புரிந்த மன்னனாவான். நெல்வேலி மாறனின் இரண்டாவது மகனுமாவான். அபிராம சுந்ரேசன்,வீரபாண்டியன் போன்ற சிறப்புப்பெயர்களையும் பெற்றிருந்தான்.சடையவர்மன் அதி வீரராம பாண்டியன் காலத்தில் நல்லூரில் இருந்து ஆட்சி புரிந்த வரதுங்கப் பாண்டியன் 'வில்லவனை வென்றான்,வல்லம் எறிந்தான்" எனக் கல்வெட்டில் குறிப்பிடப்பட்டுள்ளது. சடையவர்மன் அதிவீரராம பாண்டியன் போல் தமிழில் புலமை பெற்றிருந்தான்.பிரமோத்தர காண்டம்,கருவை கலித்துறை அந்தாதி,கருவை பதிற்றுப்பத்தந்தாதி,கருவை வெண்பா அந்தாதி, கொக்கோகம் ஆகிய நூல்களினைப் பாடிய பெருமையினை உடையவனான இவன் சிவனிடம் பக்தி உடையவனாகத் திகழ்ந்தான். போர் செய்ய வந்த தம்பிக்கு, அண்ணன் எழுதிய கடிதம் இதோ, மேலே கேளுங்கள் !!
Release date
Audiobook: 5 March 2023
English
India