Step into an infinite world of stories
சட்டென்று, அவள் உடலை தாவணியென மறைத்திருந்த ஆடையை அவன் கரம் உருவி எடுத்தது..
அர்ஜுனிடம் இத்தகைய செயலை எதிர்பார்க்காதவள் “அஜூ... என்ன பண்ற? டோன்ட் பிகேவ் லைக் திஸ், எனக்கு பிடிக்கலை?” என்று அழுத்தமாக அவன் முகம் பார்த்து கூறினாள்.
கீர்த்தியின் பேச்சில் அவளை மெல்ல விட்டு விலகியவன் கண்களோ அவள் மேனியை அணுஅணுவாக ரசனையாக துளைத்தது.
அவளை பார்த்தபடியே “எஸ், எனக்கும் தான்... எனக்கும் தான் பிடிக்கலை. இந்த கல்யாணம் பிடிக்கலை... உன்னை பிடிக்கலை... என்ன பண்ணலாம்?” என்றவன் அவன் இடுப்பில் கைகுற்றி, சற்றே அவள் முன் குனிந்து,
”கல்யாணத்தை நிறுதீடலாமா?” என்று ஆழ்ந்த குரலில் வினவவும்,,
அதிர்ந்த விழிகளுடன் “அஜூ...” என்றவள் விழிக்க,
“எஸ், வேற வழியில்லை. பாரு, இந்த டிரெஸ்ல நீ எவ்ளோ அழகா இருக்க! எந்த ஆம்பளைக்குமே உன்னை இப்படி பாத்தா என்ன தோணனும்?” என்றவன் விழிகள் பயணித்த இடங்கள் பெண்ணவளை உடல் கூச செய்தது.
அர்ஜுன் பார்வை எப்போதும் கண்ணியமானது. அதுவும் அவள் மேல் மிக கண்ணியமாக இருக்கும். அவன் அருகாமை கீர்த்திக்கு எப்போதும் ஒரு பாதுகாப்பு உணர்வை மட்டுமே கொடுக்கும். பயஉணர்வை அல்ல.
இப்போது அவன் பார்வை, அவன் அவளிடம் நடந்து கொண்டிருக்கும் விதம் அணைத்தும் அவளுக்கு அவன் மேல் அச்சத்தைக் கொடுத்தது.
இத்தனை வருட நட்பில், அர்ஜுன் அவளை பயமுறுத்தக் கூட இப்படி பேசியதில்லை.
“அஜூ... ஸ்டாப் திஸ். ஸ்டுபிட் மாதிரி பேசாத, திஸ் இஸ் நாட் யூ. நான் போகணும்” என்றவள் நகரப்போக, தன்னிரு கைகளால் அவளுக்கு அணைகட்டியவன், அவளை நெருங்கி நின்றான்.
© 2024 Kamali Maduraiveeran (Audiobook): 9798882475863
Release date
Audiobook: 26 September 2024
English
India