Step into an infinite world of stories
Lyric Poetry & Drama
திரைப்படங்களுக்கு நான் எழுதுகிற பாடல்களை யூ ட்யூப் பாதுகாத்துக் கொள்ளும், ஆனால் மேடையிலும் தனியிசையிலும் வெளியாகும் பாடல்களை இப்படிப் புத்தகமாகவேணும் பாதுகாப்பது நல்லதென்று நினைத்தேன். திரையிசை அல்லாத பாடல்கள் எழுதுவதில் ஒரு சுகம் உண்டு. ஒரு சுதந்திரம் உண்டு. நினைத்த சொற்களை எடுத்துப் பல்லவி செய்கிறேன். அந்தச் சொற்களின் வேர் என் வாழ்வோடு தொடர்புடையதாக இருக்கிறது.
திரைப்படப் பாடல்களை நம்பி வாழும் என்னைப் போன்றவர்கள் இந்தச் சூழலை எதிர்கொள்ளவும், தனியிசைப் பாடல் ஆல்பங்களில் தங்களின் கருத்துக்களை எழுதவும் அதன் மூலம் வாழ்வை நகர்த்துவதுமான சூழலை அமைத்துக்கொள்ள வேண்டும். மற்ற எல்லா இலக்கியங்களைவிடவும் பாடல் மனிதர்களோடு நெருக்கமாக இருக்கிறது. அதனால்தான் நான் பாடல்களோடு நெருக்கமாக இருக்கிறேன். இன்னார்தான் எழுத வேண்டும் இன்னார்தான் பாட வேண்டும் என்கிற சட்டதிட்டம் ஏதுமில்லை. யாரும் எதையும் செய்யலாம். எல்லாரும் எழுதலாம் எல்லாரும் பாடலாம் என்பதே உண்மை. இப்பிரபஞ்சத்தில் எந்தப் பொருளும் தனியுடைமை ஆகாது. எல்லாம் பொதுவுடைமையே.
வாங்க எழுதுவோம் - நம்
வாழ்வை எழுதுவோம்!
Release date
Ebook: 3 March 2023
English
India