Step into an infinite world of stories
Non-Fiction
நமது முனைவர் பட்ட ஆய்வினை முன்னிட்டு, திருநெல்வேலியிலுள்ள நெல்லையப்பர் கோவிலுக்குச் சென்றோம். மூலவர் சந்நிதிக்கு அருகேயுள்ள குபேரலிங்கம் சந்நிதி நம் கருத்தைக் கவர்ந்தது. ஆச்சரியப்படத்தக்க வகையில் சொல்லி வைத்தாற்போல் இரண்டு குருக்கள் அந்த சந்நிதியில் இருந்தனர். ஒருவர் தம் கையில் பெரிய பாட்டிலில் நல்லெண்ணெய் வைத்திருந்தார். அதைத் தமது உள்ளங்கையில் ஊற்றி, குபேரலிங்கத்தின் மீது சார்த்திக் கொண்டிருந்தார்.
அவரிடம் அதுபற்றிக் கேட்டபோது, “சுவாமிக்கு அபிஷேகம் செய்வதற்கு முன்பாக நல்லெண்ணெய்க் காப்பு சார்த்த வேண்டும் என்று ஆகமங்கள் சொல்கின்றன. ஆகவே அபிஷேகம் செய்வதற்கு முன்பாக எண்ணெய்க்காப்பு சார்த்திக் கொண்டிருக்கிறோம். தொடர்ந்து பால், பன்னீர், சந்தனம், இளநீர் முதலிய பதினாறு வகை அபிஷேகங்கள் நடைபெறும்” என்று கூறினார்.
அதிகாலையில் காதில் கேட்ட ஒலி... தொடர்ந்து கோயிலில் கண்ட காட்சி முதலிய தொடர் நிகழ்ச்சிகளின் விளைவே, உங்கள் கையில் தற்போது தவழ்கின்ற “கடவுளரும் நல்லெண்ணெயும்” என்ற நூல் என்பது உண்மை! வெறும் கற்பனையல்ல...!
Release date
Ebook: 28 June 2025
English
India