Step into an infinite world of stories
Fantasy
இது பசீரின் சிறுகதையை மையமாக வைத்து அடூர் கோபால கிருஷ்ணன் உருவாக்கிய திரைக்கதையை அடியற்றி உருவாக்கப்பட்ட நாவல். பார்க்காமலே காதல் என்கிற அலையை துவக்கி வைத்த கதை. இதன் கரு மிகமிக எளிமையானது. களம் சிறைக்கூடம். காலம் ஆங்கிலேயரிடம் அடிமைப்பட்டுக் கிடந்த இருபதாம் நூற்றாண்டு. இரண்டே கதாபாத்திரங்களை வைத்து யதார்த்தமாய் பின்னப்பட்ட காதல் காவியம்.
இங்கே சுவர் ஒரு குறியீடு. அதை உள்வாங்கிக்கொள்வதென்பது அவரவர் மனநிலையைப் பொருத்தது. மனிதத்தை தொட விடாமல் மனிதர்களை சாதி, மதம், நிறம், மொழி, இனம், நாடு, பணம், அகங்காரம், ஆணவம், வக்கிரம், சுயநலம், வன்மம் என எத்தனைஎத்தனையோ சுவர்கள் இங்கே நிறுவப்பட்டிருக்கின்றன.
காதலின் தடையாய் இங்கே எழும்பி நிற்கிற அந்த சுவரையே தங்களின் ஈரங்களால் கசிந்து ஊடுறுவச்செய்து தங்களின் புனிதமான காதலுக்கான ஆயுதமாக அவர்கள் ஆக்கிக் கொள்கிறார்கள். அங்கே மனதை தடை கடந்து தடையற்று பரஸ்பரம் பார்த்துக் கொள்கிற நுட்பம் காதலின் மந்திரத்தால் சாத்தியப்படுகிறது.
Release date
Ebook: 3 January 2020
English
India
