Step into an infinite world of stories
Fiction
எனக்காகத்தான் விகடன் வாங்கிக் கொண்டிருந்தேன்; எனக்காகத்தான் குமுதம் வாங்குகிறேன் என்று என்னை நேரில் சந்திக்கும்போதும், தொலைபேசியிலும் சொன்ன பல வாசகர்கள் இருக்கிறார்கள். எப்போதுமே வாங்குபவர்களிலும் பலர், இதழ் வந்ததும் முதலில் உங்கள் கட்டுரையைத்தான் படிப்பேன் என்று சொல்வார்கள். அவர்களைப் போன்ற, சமூகக் கவலைகள் உடைய எண்ணற்ற சக மனிதர்களுக்காகத்தான் தொடர்ந்து எழுதுகிறேன். தர்மத்தின் வாழ்வதனை சூது கவ்வும். தருமம் மறுபடியும் வெல்லும். கட்டுண்டோம்; பொறுத்திருப்போம். காலம் மாறும் என்று பாரதியின் பாண்டவர்கள் நம்பிக்கையுடன் பேசுவார்கள். அதே போலத்தான் இந்த சமூகத்தில் எண்ணற்ற மக்கள் இப்போது அவர்களைச் சூழ்ந்திருக்கும் அரசியல், சமூக, கலாசார இருளிலும் நம்பிக்கையுடன் இருக்கிறார்கள். அவர்களுக்காகத்தான் என் ஓ பக்கங்கள். அவர்களுக்கான ஒரு சிறு மெழுகுவத்தி, என் பார்வையுடன் உடன்பட்டாலும் உடன்படாவிட்டாலும், நான் எழுப்பும் விஷயங்கள் சிந்திக்கவும் விவாதிக்கவும் அவசியமானவை என்ற என் உறுதியான நம்பிக்கையைப் பகிர்ந்துகொள்ளும் அத்தனை பேருக்கும் மீண்டும் என் நன்றி. இப்போது ஓ பக்கங்களைக் கல்கியில் தொடர்கிறேன். அந்த அனுபவத்தைப் பற்றி, அடுத்த தொகுப்பின் முன்னுரையில் நிச்சயம் பகிர்ந்துகொள்வேன்
அன்புடன்
ஞாநி
Release date
Ebook: 30 September 2020
English
India