Step into an infinite world of stories
ஃபேஸ்புக்கால் நான் சந்தித்த பிரபலங்கள் என்று சொல்லி இருக்கிறேனே, யார் அந்த பிரபலங்கள் ?
முதலாவதாக நடிகர் ராஜ்கிரண்.
ஃபேஸ்புக்கில் அடிக்கடி நான் எழுதிக் கொண்டிருக்கும் மனித நேயம் மத நல்லிணக்க பதிவுகளின் மூலம் மட்டுமே எனக்கு அறிமுகம் ஆனவர் நடிகர் ராஜ்கிரண்.
வீட்டுக்கு அழைத்தார். வெகு நேரம் பேசிக் கொண்டிருந்தார். தம்பி என அழைத்து பாசத்துடன் பழகி இப்போதும் அவரது நெருங்கிய நட்பு வட்டத்துக்குள் நேசத்தோடும் பாசத்தோடும் என்னை வைத்திருக்கிறார் அண்ணன் ராஜ்கிரண்.
அது போல நடிகர் பாண்டியராஜன். ஃபேஸ்புக்கில் அவர் இல்லாவிட்டாலும் கூட என்னுடைய பாஸிடிவ் பதிவுகளை பற்றி, நண்பர் ஒருவர் மூலம் கேள்விப்பட்டு வீட்டுக்கே வரவழைத்து பொன்னாடை போர்த்தி பாராட்டி மகிழ்ந்தார்.
இன்னமும் கூட பல பிரபலங்களின் நட்பு, இந்த ஃபேஸ்புக் மூலம் மட்டுமே எனக்கு கிடைத்தது.
பிரபலங்கள் ஒரு பக்கம் தேடி வர, பிரச்சினைகள் மறு பக்கம் தேடி வந்தன.
கண்ணதாசனின் மகன் என்னை கோர்ட்டுக்கு இழுப்பேன் என்றார். வழக்கு போடுவேன் என்றார். இதற்கு காரணம் எனது ஒரு ஃபேஸ்புக் பதிவுதான்.
இன்னொரு பக்கம் ஃபேஸ்புக் தோழிகளால் ஏற்பட்டது பெரும் பிரச்சினை.
கடனாக கேட்ட பணத்தை உடனே கொடுக்கவில்லை என்பதால் ஒரு பெண் தோழி என்னை அன்ஃபிரண்ட் செய்தார். அவதூறும் பரப்பினார். இன்னமும் நிறைய நிறைய பிரச்சினைகள்.
இவை அத்தனைக்கும் காரணம் இந்த ஃபேஸ்புக் மட்டுமே.
எல்லாவற்றையும் இந்த புத்தகத்தில் எழுதி இருக்கிறேன்.
Release date
Ebook: 2 July 2020
English
India