Step into an infinite world of stories
Fiction
உலக வரலாற்றின் மாற்றங்களுக்கும், மேன்மைகளுக்கும் வழிகாட்டுவன சமுதாய மறுலர்ச்சி இலக்கியங்களே. போர்வாளினும் வலிமை மிக்கது பேனா மன்னர்கள் இயற்றிய சிறந்த இலக்கியங்கள்.
உலக ஒருமைப்பாட்டிற்கும். பண்பாட்டிற்கும் புகழ் சேர்ப்பன, தீர்க்கதரிசனமாக மகான்களும் அறிஞர்களும் அருளிய இலக்கியங்களே. உலக மக்கள் மண்ணில் நல்ல வண்ணம் வாழவும், வழிகாட்டுவன.
அறிவியல் முன்னேற்றத்திற்கும். சமுதாய மறுமலர்ச்சிக்கும் இலக்கியங்கள் வழிநடத்தும் தன்மைகளை, தவத்திரு அடிகளார் அவர்கள் விளக்கி செயலாற்றும் பாங்கினை எண்ணிஎண்ணி மகிழ்கிறேன்.
உலகம் போற்றும் குன்றக்குடி பசுமைப் புரட்சி திட்டத்தை உருவ்ரிக்கி வெற்றிகர்மாக செயலாற்றி அருள்வதும் தமிழகத்தின் தவப்பியனே யாகும். அறிவியல் துறையில் பல முன்னேற்றங்களை கொண்டுள்ள நாம், ஆன்ம நேய ஒருமைப்பாட்டிலும், பண்பாட்டிலும், போதிய கவனம் செலுத்தின், உலகம் முழுவதும் சமுதாய மறுமலர்ச்சியைக் கண்டு மகிழலாம்.
Release date
Ebook: 7 October 2021
English
India