Step into an infinite world of stories
Fiction
தாரிணியும் சுபாவும் சிநேகிதிகள்.சிறுவயது முதலே ஒன்றாகப் படித்து விளையாடி மகிழ்ந்தவர்கள். கல்லூரியிலும் இவர்களின் நட்புத் தொடர ஒரு நாள் சுபா தன் காதலன் சுரேந்திரனை தன் தோழிக்குஅறிமுகப்படுத்துகிறாள்.
சுரேந்திரனின் அழகு தாரிணியைப் பிரமிக்க வைக்க அவள் மனத்தில் பொறாமைத் தீ மெல்ல தலை தூக்குகிறது.
இந்த நேரத்தில் சுபா தன் காதலனின் காதலைப் பரிசோதிக்க விரும்பி தாரிணியை அவனுடன் பழகச் சொல்கிறாள்.வலியக் கிடைத்த ஜாக் பாட் .தாரிணி விரும்பி ஏற்க.....குழப்பங்கள் ஆரம்பமாகின்றன.
தாரிணிக்கு சுந்தரம் என்றொரு அத்தான் அழகற்றவன்.தாரிணி அவனை வெறுக்கிறாள்.ஆனால் தாரிணியை மனதார நேசிக்கிறான் சுந்தரம்.
சுரேந்திரனின் பார்வையற்ற தங்கை கலா சிறுவயதில் மின்னல் தாக்கியதால் இந்த அவலம் நேருகிறது. சுரேந்திரன் தன் தங்கை கலாவின் திருமணத்திற்குப் பின் தான் தன் திருமணம் என்பதில் உறுதியாக இருக்கிறான்.
தற்செயலாக சுந்தரம் கலாவைச் சந்திக்க நேருகிறது. அவளால் தன்னைப் பார்க்க முடியாது என்கிற தைரியத்தில் சுந்தரம் அவளை அடிக்கடி சந்திக்கிறான்.
கலாவிற்கு ஆபரேஷன் ஏற்பாடாகிறது. சுந்தரம் திகைக்கிறான். தன் அவலஷண முகம் பார்த்து காலா தன்னை வெறுத்துவிடுவாளோ என்ற பயம்.
இப்படி ஒவ்வொரு ஜோடிக்கும் ஒரு பிரச்சனை.
சுபா வைத்த பரீட்சையில் சுரேந்திரன் ஜெயித்தானா?
கலாவின் கண்பார்வை திரும்பியதா?
தாரிணியின் மானசீகக் காதல் என்னவானது?
காதல் என்பது சோதனைக் கூடமல்ல- உரசிப் பார்த்து உண்மையறிய முடியாது. அதற்கு பரீட்சை தேவையில்லை. ஒவ்வொரு முறையும் ஒவ்வொரு விடை கேட்கும் கேள்வித் தாள் அது.
இதை உணர்த்தும் நாவல் மலர் இது.
“விழி மலர்.” கடைசியில் உங்கள் விழிகளில் கண்ணீர் மலரை பூக்க வைக்கும் இந்த விழி மலர். படியுங்கள் கண்களைத் துடைத்துக் கொள்ளுங்கள்.
Release date
Ebook: 18 May 2020
English
India