Step into an infinite world of stories
Religion & Spirituality
திருமூலர் ஆன்மீக செயதிகளைத் தருகையில் நிறைய புவியியல் தாவரவியல், வானவியல், இயற்பியல் உவமைகளை பயன்படுத்துகிறார். இவைகளை எல்லாம் அறிவியல் அறிந்தோர் ரசித்துப் படிக்கலாம். வேதங்களைப் போலவே ஏராளமான பாடல்களில் மறைபொருளில் பேசுகிறார். இவைகளைப் படித்துவிட்டு வெள்ளைக்காரர்கள் வேதங்களை மொழிபெயர்த்து இருந்தால் பிழைகளைத் தவிர்த்து இருக்கலாம். திருமூலர் பசுக்களை எவ்வளவு விதங்களில் பயன்படுத்துகிறார் என்று பார்த்தால், அரவிந்த மகரிஷி வேதங்களுக்குச் சொன்ன பொருள் தான் சரி என்பது விளங்கும். சுருக்கமாகச் சொல்ல வேண்டுமானால் இந்துக்களின் பரிபாஷையை மறைமுகமாக, மரத்தை மறைத்தது மாமத யானை முதலிய செய்யுட்கள் மூலம் உலகிற்குக் காட்டியுள்ளார் நான் அறிவியல் நோக்கில் கண்ணோட்டமிட்டது எனது சொந்தக் கருத்துக்கள். அவைகளைப் படித்து உங்கள் கருத்துக்களையும் எழுதுங்கள்.
Release date
Ebook: 30 August 2025
English
India
