Step into an infinite world of stories
Lyric Poetry & Drama
இந்த ஆண்டு தமிழ்த் திரைப்படம் தொடங்கி 75 ஆண்டுகள் கடந்து விட்டது. இந்த வருடத்தில் இரண்டு மாபெரும் கவிஞர்களின் வராலாற்றினைப் புத்தகவடிவமாகத் தருவது சாலப் பொருந்தும்.
என்னுடைய நீண்ட கால அருமை நண்பர் கவிஞர் வாலி அவர்கள் கவிஞர் இளநகர் காஞ்சிநாதன் குறிப்பிட்டது போல எனக்கு ஒரு கண் என்று தான் சொல்ல வேண்டும்.
பாபநாசம் சிவம், சுந்தர வத்தியார், உடுமலை நாராயண கவி, பட்டுக்கோட்டை கல்யாண சுந்தரம், மருதகாசி, தஞ்சை ராமய்யதாஸ், ஜரினா பேகம், உவமை கவிஞர் சுரதா, புலவர் புலமைப்பித்தன், கவிஞர் வைரமுத்து, கவிஞர் முத்துலிங்கம், கவிஞர் நா. காமராசன், கவிஞர் பொன்னடியான், காமகோடியான், மு. மேத்தா, கே.பி. காமாட்சி மற்றும் ஆபாவாணன் போன்ற கவிஞர்களுடன் நெருங்கிப் பழகிய அனுபவம் எனக்கு அதிகம் இருந்தாலும், "கவிஞர்களின் காலச்சுவடு" என்னும் இந்த புத்தகத்தில் கண்ணதாசனைப் பற்றியும் கவிஞர் வாலியைப் பற்றியும் எழுதியுள்ள தம்பி இளநகர் காஞ்சிநாதன், நான் மறந்து போன சில நினைவலைகளை தன்னுடைய தமிழ் வளத்தால் மீண்டும் மலரச் செய்துள்ளார்.
எனக்கு கவிஞர் கண்ணதாசனும், கவிஞர் வாலியும் இரண்டு கண்கள். மூன்றாவது கண் நெற்றிக்கண். அது தான் பட்டுக்கோட்டை கல்யாண சுந்தரம். இப்படி பேரும் புகழும் வாய்ந்த இரண்டு கவிஞர்களின் வரலாற்று நூலை அழகாகத் தொகுத்து, ஆத்மார்த்தமாக இரண்டு பேருக்கும் இரண்டு காயத்ரி மந்திரங்களை வடித்திருப்பது புதுமையாகவும் அதே சமயத்தில் தன்னுடைய குருபக்தியையும் வெளிப்படுத்திருப்பது மிகவும் போற்றுதற்குரியது.
எல்லாம் வல்ல இறைவன் இவர்களுக்கு நல்லருள் தரவேண்டும் என்று வேண்டிக் கொள்வதோடு மட்டுமல்லாமல் மேலும் பல நல்ல காரியங்களைத் தொடர்ந்து செய்ய வேண்டும்.
Release date
Ebook: 5 February 2020
English
India