Step into an infinite world of stories
5
Non-Fiction
யுனிக்ஸ், (லைனக்ஸ உட்பட) ஆப்பரேட்டிங் சிஸ்டத்தில் இயங்கும் முறையும், கட்டமைப்பு எனப்படும் ஆர்க்கிடெக்சரின் அடிப்படையும், சுவையாக கற்பனையில் பிறந்த கதைகளுடன் தரப்பட்டிருக்கிறது.
கனிபோர்னியாவில் உள்ள பெர்கலி பல்கலைக் கழகத்தில் அமைக்கப்பட்ட யுனிக்ஸிலிருந்து, இன்று புழக்கத்திலுள்ள ஐந்து வகையிலும் சரி, இலவசமாகக் கிடைக்கும் லைனக்ஸ் எல்லாவற்றிலும், கணக்கில்லாத பல முன்னேற்றங்கள் செய்யப்பட்டுள்ளன.
வேறு விதமா சொன்னா, இன்று யுனிக்ஸ் மற்றும் லைனக்ஸ் ஒரு கடல். அவை முழுவதும் இங்கே விளக்கப்படவில்லை. ஆனால், அவற்றை பிறர் உதவி இல்லாமல் அறிந்து கொள்ள ஓரளவு ஆழமான அடிப்படை தேவை. அதை மாத்திரம் இங்கே தருவோம்.
அப்படிப்பட்ட அடிப்படையை தானே படித்து சுலபமாகப் புரிந்து கொண்டு பயன்படுத்த, இந்த புத்தகத்திற்கு இணையாக வேறு ஒரு புத்தகம் எழுதப்படவில்லை.
உதாரணமாக முதலில் வடிவமைக்கப்பட்ட யுனிக்ஸிலே, இண்டர்பிராசஸ் கம்யூனிகேஷன் (IPC) என்னும் ஒரு முக்கிய ஏற்பாட்டில், பைப்ஸ் என்ற ஒன்று மாத்திரமே இடம் பெற்றிருந்தது.
பின் வந்த யுனிக்ஸிலே, பைப்ஸ், ஃபிஃபோ, மெசசெஜ் கியூஸ், செமாஃபோர், சாக்கெட்ஸ் என்று ஐந்து வித ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. இவை யுனிக்ஸின் சக்தியை அதிகரித்திருக்கிறது.
இந்தப் புத்தகம் யுனிக்ஸ்-லைனக்ஸ் குறித்த அடிப்படைகளை பிசிரில்லாமல் கற்கவும், அதில் சக்திவாய்ந்த ஒரு பிரிவான, யுனிக்ஸ் இன்டர்னல்ஸ் அல்லது யுனிக்ஸ் புரோகிராமிங் என்ற அறிவை Design of Unix Systems by Maurice Bach என்ற புத்தகத்திலிருந்து அடந்து, ஒரு சிறந்த சிஸ்டம்ஸ் புரோகிராமராக அல்லது சிஸ்டம்ஸ் எஞ்சினிரியராக உயர ஒரு பலமான அடித்தளமாக அமையும்.
என். நடராஜன்
Release date
Ebook: 18 May 2020
English
India