Step into an infinite world of stories
Lyric Poetry & Drama
பல நாட்களாய் கனவு கண்டு உறங்கிக் கொண்டிருந்த எனது எண்ணங்களின் மாமழைதான் இந்த முதல் புத்தகம்.
இதனை எழுதுவதற்கு உத்வேகமாய் பலர் இருந்திருக்கிறார்கள், அவர்களுக்கு எனது மனமார்ந்த நன்றிகள்.
பள்ளி நாட்களில் எனது கவித் திறமையை இனம் கண்டு கடலூர் மாவட்ட அளவில் முதற்பரிசைப் பெறச் செய்த எனது தமிழ் ஆசிரியர் திரு.அமலதாஸ் அய்யா அவர்களுக்கு எனது தனிப்பட்ட நன்றியைத் தெரிவிக்க கடமைப் பட்டுள்ளேன். மேலும், இந்தப் புத்தகத்திற்கு வாழ்த்துரை வழங்கிய திரைப்பட இயக்குனர் திரு.அதிரூபன் அவர்களுக்கும், பாராட்டுரை வழங்கிய இலங்கை முகநூல் நண்பர் திரு. வன்னியூர் கிறுக்கன் அவர்களுக்கும் எனது நன்றிகள்.
கவிதை வானில் சிறகை விரித்துப் பறக்கத் துடிக்கும் ஒரு சிறு பறவையின் முதல் சிறகசைப்புதான் இந்தப் படைப்பு.
அப்படி நான் பயணித்த தூரங்களில் சந்தித்த, சிந்தித்த, நிஜ மற்றும் நிகழ்வுகளின் கற்பனைத் தொகுப்புதான் இந்த மழையிடை மின்னல்கள்.
இந்த மின்னலின் வெளிச்சத்திலும் தமிழின் மழையிலும், கனமாய் ஒலிக்கும் இந்தப் புத்தகத்தில் சில நேரம் நனைந்துதான் பாருங்களேன்.
மூன்று பகுதிகளாக இந்த “மழையிடை மின்னல்கள்” புத்தகம் பிரித்து எழுதப்படுள்ளது.
1. தூறல்கள் - சிறுகவிதைகள், காதல் துணுக்குகள், ஹைக்கூ கவிதைகள் போன்றவைகள் யாவும் தூறல்களாகவும்,
2. அத்திக்கட்டி ஆலங்கட்டி - பலவரி கவிதைகள், அன்பு, காதல், வாழ்வியல் போன்றவை யாவும் அத்திகட்டி ஆலங்கட்டியாகவும்,
3. பேய் மழை - சமுதாயம், கோபம், நாட்டு நடப்பு போன்றவை யாவும் பேய் மழையாகவும் பிரிக்கப்பட்டுள்ளது.
-க. பரமகுரு
Release date
Ebook: 3 January 2020
English
India