Step into an infinite world of stories
இக்கதையை நான் 2020ம் வருடம் நவம்பர் மாதம் எழுதினேன். என்னுடைய மூன்றாவது கதையாகும். கண்ணாடி சிற்பக் கலைத் தொழில் செய்யும் பெண்ணாக நாயகனுக்கு அறிமுகமாகும் நாயகி (தேவவதி), தன் வாழ்க்கையில் சவாலை ஏற்க வேண்டும் என்ற குறிக்கோளைக் கொண்டவள். காவல் அதிகாரியாக நாயகன் (விபுதன்).
நாயகியின் அக்கா (பிரபாவதி), கணவனை விட்டுப் பிரிந்து வாழ, ஏன், எதனால் பிரிவு ஏற்பட்டது என்று புரியாமல் குழம்பும் நாயகி, நிரந்தர பிரிவை எடுக்கும்படி கூறுகிறாள். ஆனால் அதை மறுக்கிறாள் பிரபாவதி.
அக்காவின் கடந்தகால வாழ்க்கையில் ஏற்பட்ட கசப்பான விஷயங்களை அறியும் அவள், அக்கா கணவனின் (யாமீரன்) சுயரூபத்தை வெளி உலகுக்கு வெளிச்சம் போட்டுக் காட்டப் போவதாக எண்ணம் கொள்கிறாள்.
தனக்கு வீட்டில் பார்த்த வரணை வேண்டாம் என்று கூறப் போக, அந்த மாப்பிள்ளையின் கண்முன்னே நாயகனை விரும்புவதாக கூறுகிறாள். சந்தர்ப்ப சூழ்நிலையால் நாயகியும் நாயகனும் திருமணம் செய்துக் கொள்ள, நாயகனின் அண்ணன் தான் தன் அக்காவின் கணவன் என்றும் அறிந்துக் கொள்கிறாள்.
நாயகியின் எண்ணம் நிறைவேறியதா, அக்கா கணவன் யார்? அவர்களுக்குள் பிரிவு ஏற்பட காரணம் என்ன? நாயகன் யார்? என்பதைக் கதையை வாசித்துத் தெரிந்து கொள்ளுங்கள்.
Release date
Ebook: 9 July 2025
Tags
English
India
