Step into an infinite world of stories
Short stories
" பாறைக்குள் பன்னீர் புஷ்பம்" என்னும் இச்சிறுகதை தொகுப்பில் மொத்தம் 20 சிறுகதைகள் இடம் பெற்றுள்ளன.
இத்தொகுப்பில் பல்வேறு கதைகள் இடம் பெற்றிருந்தாலும், குடும்பக் கதைகளே அதிகம் இடம் பெற்றிருக்க காரணம், பொதுவாகவே படிக்கும் வாசகர்களுக்கும், கதாசிரியனுக்கும் இடையில் ஒரு நெருக்கமான உறவை ஏற்படுத்தக்கூடியவை குடும்பக்
கதைகளே என்பது என் தனிப்பட்ட கருத்து.
இத்தொகுப்பில் இடம்பெற்றுள்ள "தாய்ப்பால் பிச்சை" என்னும் சிறுகதை மதுரை, அதிதி டிரஸ்ட் நடத்திய "எம்.வி.வெங்கட்ராமன் சிறுகதைப் போட்டி"யில் முதல் பரிசு வென்ற கதை. மேலும், " இன்னொரு சம்ஹாரம் "சிறுகதை சென்னை " இலக்கிய பீடம்" மாத இதழ் நடத்திய சிறுகதைப் போட்டியில் பரிசு பெற்ற கதை.
பொதுவாகவே ஒரு கதையின் வெற்றி என்பது, படித்து முடித்த வாசகனின் நெஞ்சில் சில நிமிடங்களாவது நின்று, அவனை கொஞ்சம் அசை போட வைத்தால் அதுவே வெற்றி. இத்தொகுப்பில் இடம்பெற்றுள்ள என் கதைகள் நிச்சயமாக வாசகனின் மனதில் நிற்கும் என நம்புகிறேன்.
இவண்
முகில் தினகரன்
Release date
Ebook: 18 May 2020
English
India