Step into an infinite world of stories
Early 11th Century CE. Chōḷa dancer Nakkan Maduravāsaki decides to undertake the royal assignment at Capital city Thanjāvūr big temple and starts her journey from Tiruvidaimarudur. She is afraid that her long buried past, which has been haunting her for a while, is waiting to unravel itself at Thanjāvūr. After much hesitation, she decides to go anyway and face fate whatever that may be. Thanjāvūr welcomes her with clasped hands. Efforts are underway to build the massive big temple. The main administrative team headed by Tennavan Mūvēnda Vēlār is busy night and day in giving shape and form to the lofty vision of the emperor. Madura involves herself with the team and commits herself to the project. The Saiva saint who met her earlier in Tiruvārūr, meets her again in Thanjāvūr and provides his blessings. Finally she meets the man who unravels her mysterious past. Who is she, really? What about her family background? Who is her father? and why did he abandon his family when she was just five years old ? Above all… how is her past related to the present investigations and the assassination attempt on King Rājarāja Chōḷa? Udhayabānu - Panithirai (Veil of mist) is a continuation of riveting multi part historical tale set in ancient Chōḷa, Chēra and Paṇdya countries - involving several characters and a complex interconnected storyline. It is a follow up to the earlier works in StoryTel by the same author, viz. Rājakēsari, Chērar Kōttai and Udhayabānu - Kārmēgam. Join narrator Deepika Arun as she takes us right into the midst of an intense battlefield in which Chōḷa soldiers are pitching themselves against the Paṇdya ābathuthavis… let the swords and shields dash with one another… Chalang! Chalang! Palang! Palang!
காலம் 11ம் நூற்றாண்டு. பலமான யோசனைகளுக்குப் பிறகு திருவிடைமருதூரில் ஆடல் கற்பிக்கும் தலைக்கோலி நக்கன் மதுரவாசகி, தஞ்சையில் மாமன்னர் இராஜராஜர் கட்டிக் கொண்டிருக்கும் பெரிய திருக்கற்றளியில் சென்று பணியில் அமர முடிவு செய்கிறாள். ஆனால் தஞ்சையைப் பற்றிய நினைவுகள் அவளுக்கு பல்வேறு தயக்கங்களைக் கொடுக்கின்றன.அவள் அறிந்திராத… சில சமயங்களில் அறிய விரும்பாத அவளது பூர்வீக வாழ்க்கை பற்றிய இரகசியங்களை அங்கு சென்றால் அறிய நேரிடும் என்பதே அந்தத் தயக்கத்திற்குக் காரணம். என்றாலும் ஏதோ ஒரு பெரும் ஈர்ப்பு உந்தித்தள்ள தஞ்சைக்குச் செல்கிறாள்.
நாற்திசைகளிலும் விரிந்து பரவி நிற்கும் தஞ்சை மாநகரம் அவளை இரு கரம் கொண்டு வரவேற்கிறது. அங்கே எழும்பிக் கொண்டிருக்கும் பெரிய திருக்கற்றளியையும் அதற்காக இரவு பகலாக உழைத்துக் கொண்டிருக்கும் தென்னவன் மூவேந்த வேளாரையும் அவரது அதிகாரிகளையும் சந்திக்கிறாள் மதுரா. கற்றளியின் பிரம்மாண்டமான அளவுகளும் அதற்காக எடுக்கப்படும் முயற்சிகளும் அவளுக்கு பிரமிப்பை ஏற்படுத்துகின்றன. திருவாரூரில் முன்பு அவளை ஆற்றுப்படுத்திய துறவி இப்போது மீண்டும் எதிர்படுகிறார். அவளுக்கு ஆறுதல் அளிக்கிறார். இறுதியில் அவளது பூர்வ கதையை உரியவர் மூலம் கேட்டறிகிறாள். தான் யார் என்பதை உணர்ந்து விக்கித்துப் போகிறாள் மதுரா. உண்மையில் அவள் யார்?அவளது பெற்றோரின் கதை என்ன? அவளது தந்தை சிறு வயதிலேயே ஏன் அவர்களைத் தவிக்கவிட்டுச் சென்றார்? அவளது பழங்கதைக்கும் தற்போது நடைபெறும் சம்பவங்களுக்கும் என்ன தொடர்பு?
பண்டய தமிழகத்தின் சேர சோழ பாண்டி பண்டலங்களில் நாற்திசைகளிலும் விரிந்து பரவும் பெருங்கதைக்களத்தினூடே எண்ணற்ற கதாபாத்திரங்களையும் உணர்வுகளையும் உச்சங்களையும் தொட்டு முன்னேறும் இந்த விறுவிறுப்பான நீள்புதினம், ஸ்டோரிடெல் நேயர்களால் விரும்பிக் கேட்கப்படும் இராஜகேசரி, சேரர் கோட்டை மற்றும் உதயபானு கார்மேகம் ஆகிய புதினங்களின் தொடர்ச்சியாகும். வாருங்கள்! ஒலிப்புத்தகி தீபிகா அருணின் குரல் வழி பாண்டி நாட்டு ஆபத்துதவிகளும் சோழ நாட்டு வீரர்களும் தத்தம் வாட்கள் விற்கள் கேடயங்களுடன் இரவு பகலாக முட்டி மோதும் அந்தக் காலத்திற்குள் நுழைவோம்…. சளாங்! சளாங்! பளாங்! பளாங்!
© 2021 Storyside IN (Audiobook): 9789355442246
Release date
Audiobook: 3 December 2021

English
India