Step into an infinite world of stories
Thrillers
மனித மூளையில் பத்து சதவீதம் மட்டுமே பயன் படுத்தப்பட்டுத்தான் இன்றைய உலகம் உருவாகியிருக்கிறது. மூளையின் நூறு சதவீதத்தை பயன்படுத்தும் ஒரு புதிய மனித இனத்தை உருவாக்க நினைக்கிறான் உலக கோடீஸ்வரர்களில் ஒருவனான ஜான் கிரேவர். அதற்காக அவன் தேர்ந்தெடுப்பது தமிழ்நாட்டின் குக்கிராமம் ஒன்றில் வாழும் நீண்டநாள் குழந்தையில்லாத மங்களம் என்ற பெண்ணை. அவளது உடன் பிறந்தவர்கள் அருணாசலமும் வாசுவும். அருணாசலம் சின்ன வயதிலேயே காணாமல் போய் காசியில் அவதார்பாபா என்ற பெயரில் மடாதிபதியாக இருக்கிறான். அவனது தந்தை மரண தறுவாயில் அவனது பூர்வாசிரமத்தை சொல்வதால் தன்னுடைய குடும்பத்தை தேடி அவன் தமிழகத்திற்கு வருகை தருகிறான். வாசு ஒரு டிரக் டேஸ்டர். துரைபாண்டியனிடம் அதை கற்று கொண்டவன். சிறையில் இருக்கும் துரைபாண்டியனுக்கு விபத்தில் பைத்தியம் பிடித்ததால் அவனுடைய இடத்திற்கு வாசுவை வேலை செய்ய வைக்க நினைக்கிறான் தம்பி. அவனிடமிருந்து தப்பி அவதார்பாபாவிடம் அடைக்கலமாகிறான் வாசு. கலவரம் ஒன்றை விசாரிக்க அதே இடத்திற்கு வந்து சேர்கிறான் சி.பி.ஐ ஆபிசரான முகமது சுல்தான். அவனது பட்டியலில் இடம் பிடிக்கிறான் அவதார்பாபா. அண்ணனும் தம்பியும் அடையாளம் தெரிந்து கொண்டு ஒன்று சேர்ந்தார்களா? மங்களத்தை காப்பாற்றினார்களா? முகமது சுல்தானிடமிருந்து அவதார்பாபா தப்பித்தானா?
Release date
Ebook: 28 June 2025
English
India
