Step into an infinite world of stories
'பூ பூக்கும் ஓசை' குடும்பப் பின்னணியில் எழுதப்பட்ட கதை. இக்கதைக்கு என் மனதில் எழுந்த ஒரு கேள்வியே கதைக் கருவாக அமைந்தது. 'காதல் ஒரு இளைஞன் அல்லது இளம்பெண்ணை ஆட்கொள்ளும் போது, தம் குடும்பத்தின் எதிர்ப்பை மீறி, எல்லா உறவுகளையும் உதறிவிட்டு அவர்களிருவரும் திருமணம் செய்து கொள்வது இன்று சகஜமான ஒரு விஷயமாகி விட்டது. அப்படி குடும்பங்களை உதறிவிட்டு திருமணம் செய்து கொண்டு தனித்து வாழும் ஒரு தம்பதிக்கு விரக்தி, வறுமை, எதிர்ப்பு, நிராகரிப்பு, அவமானம், அங்கீகாரமின்மை என்று பல விதமான பிரச்சனைகள் ஏற்படும். அதையெல்லாம் காதல் என்கிற சக்தியைக் கொண்டு சகித்துக் கொள்கிறார்கள். என்றாலும் , பரஸ்பரம் ஒருவருக்கொருவர் அவர்களே பிரச்சனையானால் அப்போதும் அந்தக் காதல் சகித்துக் கொள்ளுமா?' என்கிற கேள்வியே அது. அந்தக் கேள்விக்கு கற்பனையான பாத்திரங்களைக் கொண்டு விடை தேடும் முயற்சியில் விளைந்ததே இந்த நாவலாகும்.- பட்டுக்கோட்டை பிரபாகர்
Release date
Ebook: 4 December 2019
English
India