Step into an infinite world of stories
மென்மையான தென்றல் இந்தக் கதை. வல்லினம் எழுத்திலும் அதிகம் இல்லை. சம்பவங்களிலும் அதிகம் இல்லை.
எனவே மிருதுவான சலசலப்பில் செல்லும் தெளிவான நீரோடை போல் ஓடுகிறது கதை.
ராம்சங்கர் என்ற ஒரு உண்மை நபர் வாழ்க்கையில் இருப்பாரோ தெரியாது.
ஆனால் நம் ஒவ்வொரு மனத்திலும் ஒரு ராம்சங்கர் ஒளிந்து கொண்டிருக்கிறார்.
அந்த ராம்சங்கர் ஒரு வசுந்தராவை நாடும் ஏக்கம் நம் மனங்களில் எப்போதும் இருந்து கொண்டிருக்கும்.
வாழ்க்கையில் இம்மாதிரி அந்தரங்கத்து விருப்பங்கள் (ஆசை என்று போட விரும்பவில்லை) எல்லாம் எல்லோருக்கும் வெறும் சொப்பனங்களாகப் போய்விடும்.
வசுந்தரா என்பவளை சந்திக்கவும் முடியாது. அவளிடம் தனி உறவு கொள்ளவும் முடியாது.
ஆனால் கதையில் பாருங்கள்.
கற்பனை என்று தெரிந்தால் கூட வசுந்தரா மெள்ள மெள்ள ஆச்சரியமாக ஒரு நிஜ உரு போல ஆகிறாள்.
அவளும், அவள் கணவர் சிவராமனும் நடத்தும் வாழ்வை இதோ நம் கையால் தொட்டுவிடலாம் போல இருக்கிறது.
கதையும் முடியும்போது அவர்கள் நிஜங்களாகவே நம் மனதில் பதிந்துவிடும் பிரமை நன்கு விழுந்து விடுகிறது.
நாம் ஒரு சாளரத்தின் வழியே ராம்சங்கர், வசுந்தரா, சிவராமன் இவர்கள் வாழ்வை நேரில் பார்க்கும் அனுபவம் ஏற்படுகிறது.
இந்த ஆச்சரிய அனுபவத்திற்கு கதை மட்டும் அல்ல, ஆசிரியரின் நடையும், எடுத்துச் செல்லும் பாங்கும் மிக அருமையாக உதவுகின்றன.
கதை நம் மனங்களில் வெகுகாலம் ரீங்கரிக்கும்.
புஷ்பா தங்கதுரை
Release date
Ebook: 18 May 2020
English
India