Step into an infinite world of stories
Fantasy
ஈரானிய திரையுலகில் இவரிடம் உதவியாளர்களாக இருந்தவர்கள் பலர் அற்புதமான இயக்குநர்களாக உருவெடுத்திருக்கிறார்கள். இவரின் தி வின்ட் வில் கேரி அஸ்(1999), க்ளோஸ்-அப் (1990), டேஸ்ட் ஆஃப் செரி(1997), லைக் சம்ஒன் இன் லவ்(2012) என்று இவரது ஒவ்வொரு படமும் கலாப்பூர்வமானவை. ஈரானிய நியூ வேவ் பெர்சிய திரைப்பட இயக்கத்தின் முன்னோடிகளில் ஒருவர்.
2002-ல் வந்த டென் படத்தை பற்றி பேசுகையில், மக்களை ஏதோ ஒரு வகையில் பாதிப்படைய செய்ய வேண்டும் என்கிற திட்டத்தோடே இந்த படத்தை இயக்கியதாக தெரிவித்திருக்கிறார். இந்த படத்திற்காக அவர் முன்கூட்டியே ஸ்கிரிப்ட் உருவாக்கிக் கொள்ளவில்லை. சாலைகளில் நடப்பதை சிறிது காலம் கூர்ந்து கவனித்து வந்த போது தோன்றிய கருவை மையமாக வைத்தே உருவாக்கினார்.
டென் திரைப்படத்தை கேமராமேன் இல்லாமலேயே படமாக்கியிருக்கிறார். சவுண்ட் இன்ஞினியர் யாரையும் பயன்படுத்தவில்லை. இரண்டே இரண்டு டிஜிட்டல் கேமராவை காரில் பொருத்தினார். ஒன்று காரை ஓட்டும் நாயகி மான்யாவின் பக்கம். மற்றொன்று காரின் மறுபக்கம் என பொருத்தி, படத்தை தனியொருவராக எடுத்து முடித்து விட்டார்.
இதில் நடித்தவர்கள் பலரும் தொழில்முறை நடிகர்கள் அல்ல. அப்போதைக்கு அப்போது இயக்குநர் அங்கே சந்திக்கிற நபர்களின் மனநிலையை ஆராய்ந்து அதற்கேற்ப உருவாக்கித் தந்த ஐடியாவை ஒட்டி அவர்களாகவே சொந்தமாய் யதார்த்த்த்தோடு உரையாட சுடச்சுட படம் பிடித்து உயிரோட்டமான ஒரு படைப்பை உருவாக்கி விட்டார்.
திரைப்பட மேதை கோடார்ட் திரைப்படம் கிரிஃபித்தில் துவங்கி, அபாஸ் கிராஸ்டமியில் உச்சம் தொடுகிறது என்று சொல்லியிருக்கிறார்.
இதில் நாயகியாக நடித்திருப்பவர் மான்யா... ஈரானிய மொழியான பார்சியில் எடுக்கப்பட்ட படம். பத்து காட்சிகளில் ஒரு சமூகத்தின் பாரபட்சமான அடுக்கு, பாலியல் பேதமை மற்றும் பேதங்களை கவிதையாக இந்த திரைக்கதை பதிவு செய்கிறது.
Release date
Ebook: 3 January 2020
English
India
