Step into an infinite world of stories
Fiction
பரந்து விரிந்த வனாந்திரம். திரும்பிய புறமெல்லாம் வறண்ட் நிலங்கள்! காய்ந்து சருகாய்ப் போன மரங்கள். அங்கங்கே கூட்டம் கூட்டமாய் முகம் தெரியாத விதவிதமான மூகமூடிகளுடன், எள்ளி நகையாடும் மனிதர்கள். இதில் அழகான முகமூடிகளைத் தாங்கிய உருவங்களை நாடிச் சென்ற மற்றொரு முகமூடி அதன் உண்மை முகத்தைக் கண்டு அலறிக்கொண்டு காத தூரம் ஓடும் காட்சி..........மத்தியில் மரக்கட்டையாய் நீண்ட ஒரு உருவம் மல்லாந்துக்கிடக்க, சுற்றிலும் கருமையான, பயங்கர தோற்றத்துடன் கொத்தித் திங்கக் காத்திருக்கும் இராட்சத கழுகுகள்..........அய்யோ பாவம் யாரந்த உருவம் என்று உற்று நோக்க.......... அம்மாடியோவ்.......... நானா அது ?
வியர்வை வெள்ளம் ஆறாய்ப் பெருக, க்ண்கள் திறக்க மறுக்க, மிகச் சிரமப்பட்டு போராடி மீண்டு வந்தது போல் கண் விழித்தாள ரம்யா. டிஜிட்டல் கடிகாரம் இரவு 2 மணியைக் காட்டியது. ஓ.......கனவா.......சே......... என்ன மோசமான கனவு!
இரவு வெகு நேரம் தூங்காமல் எதை, எதையோ நினைத்து மனக் குழப்பத்தோடேயே கண் அசந்ததின் விளைவுதான் இப்படி ஒரு மோசமான கனவு என்பது புரிந்தாலும், அதைத் தவிர்க்கும் உபாயம்தான் அவளுக்குப் பிடிபடவில்லை. ரிஷியின் மனைவி சொன்ன விசயம் தன் மனதை மிகவும் பாதித்திருந்ததையும் உணர முடிந்தது அவளால். ரிஷி மீது இருந்த அத்துனைக் கோபமும் நொடியில் மறைந்து போனது அவளுக்கே ஆச்சரியமாகவும் இருந்தது. ஆம் ரிஷி செய்தது சாதாரண தியாகமா? எந்த குறையும் இல்லாத பெண்களைத் திருமணம் செய்யவே ஆயிரம் யோசனை செய்யும் இளைஞர்கள் மத்தியில் ஒரு பெண் என்பதற்கு ஆதாரச்சுருதியான, கருவைச் சுமக்கும் அந்த கர்பப்பையே இல்லாத ஒரு பெண்ணை திருமணம் செய்து கொள்ள முன்வந்த அவன் தியாகச் சிந்தையை எப்படி பாராட்டுவது. தன் தாய், அந்த கொடிய வியாதியால் அவதிப்பட்டு, உருக்குலைந்து உயிர்விட்ட ரணம் அந்த இளகிய உள்ளத்தை ஆழமாக பாதித்ததன் விளைவு, அதே வியாதியால், திருமண வயதில் பாதிக்கப்பட்டு, நோயின் ஆரம்பக்கட்டத்திலேயே கண்டுபிடித்ததனால், அந்த ஒரு பகுதியின் இழப்போடு உயிர் பிழைக்க முடிந்த, தன்னுடைய தூரத்து உறவினரின் பெண்ணை மனமுவந்து மணந்து கொண்ட அவனைத் தன் நண்பன் என்று சொல்வதில் பெருமையாக இருந்தது அவளுக்கு.
Release date
Audiobook: 1 July 2023
English
India