Step into an infinite world of stories
Religion & Spirituality
யுகதர்மம் சீர்குலைந்து உலகத்துக்கே உபாதை ஏற்படின் யார் தீர்த்து வைக்க முடியும்? தெய்வத்தினால் மட்டுமே அது இயலும். தெய்வம்தான் மனித வடிவமெடுத்து நாயன்மாராகி உலகத் துன்பங்களைத் தீர்க்க முடியும்.
இன்று அவதார புருஷராக, நாயன்மாராக, உலக குருவாக ஒளிரும் ஸ்ரீ காஞ்சிப் பெரியவர்கள்தாம் குடும்பத்துக்கும், நாட்டுக்கும், உலகுக்கும் ஏற்படும் சந்தேகங்களுக்கு சங்கடங்களுக்கு மார்க்கம் சொல்ல வல்லவர்களாக, துன்பத்தைப் போக்க வல்லவர்களாகத் திகழ்கின்றார்கள்.
பெரியவர்களிடம் போனால் நம் இன்னல்கள் இன்பமயமாகின்றன. மனத்துக்கு மகிழ்ச்சி கிடைக்கின்றது. அந்த தெய்வ சந்நிதானத்தின் முன் நின்றால் ஒரு சாந்தி கிடைக்கின்றது. குளிர் பூந்தென்றல் நம் மேனியில்படுவது போன்ற உணர்ச்சி ஏற்படுகின்றது. வாழ்க்கையில் ஒரு துணிவு, தெம்பு, தன்னம்பிக்கை ஏற்படுகின்றது. இவை அவர்கள்பால் முழு ஈடுபாடு கொண்டவர்கள் தினசரி உணரும் உண்மை, இவ்வுண்மையை நாமும் உணருவோம் இப்புத்தகத்தின் வாயிலாக....
Release date
Ebook: 9 May 2022
English
India