Step into an infinite world of stories
நித்தியானந்தம் ஒரு இஞ்சினியர் அவருடைய நண்பர் டாக்டர் பர்னாண்டோ கொலை செய்யப்படுகிறார். கொலையாளி நேத்திரசிகாமணியை கைது செய்கிறார்கள். தகுந்த ஆதாரம் இல்லாத காரணத்தால் நேத்திரசிகாமணி விடுதலை ஆகிவிடுகிறார். இதனால், நித்தியானந்தம் இஞ்சினியர் பதவியை ராஜினாமா செய்தார். தன்னுடைய முப்பத்தைந்தாவது பிராயத்தில், சட்டக் கல்லூரியில் மாணவனாகச் சேர்ந்து வழக்கறிஞர் ஆகிறார். நித்தியானந்தம் உயர்மன்ற நீதிபதிகளின் பெருமதிப்புக்கு இலக்கானவர். அவருக்கு நான்கு மகன்கள். மூன்று மகன்கள் வழக்கறிஞர்கள். நான்கு வழக்கறிஞர்களைக் கொண்ட குடும்பத்தில் பிறந்த பட்டாபிக்கு, சட்டக்கல்லூரியில் நுழையக்கூட அருகதை இல்லாமல் போய்விட்டது. பதினைந்து வருடம் கழித்து நித்தியானந்தம், நேத்திரசிகாமணி இருவரும் சந்திக்கிறார்கள். இருவருக்குள்ளும் கோபம் அதிகமாகி இருவரும் அவர்களுக்குள் ஒரு சபதம் போடுகின்றனர். அந்த சபதம் என்ன? அந்த சபதத்தால் ஏற்பட்ட விளைவுகள் என்ன? அந்த சபதம் நிறைவேறியதா? தொடர்ந்து படியுங்கள்...
Release date
Ebook: 30 September 2020
English
India